மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்களது வருகை மனதுக்கு மகிழ்ச்சி தரும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் அனுகூலம் ஏற்படும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். மாணவர்களது நிலை உயரும். கணவன்-மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் உண்டாகும். விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. கடுமையாக உழைத்துப் பாடுபட வேண்டிய நேரமிது. உழைப்புக்குப் பின்வாங்காமல் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. 25-ம் தேதி முதல் கலைஞர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 26-ம் தேதி முதல் வியாபாரம் வளர்ச்சி பெறும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 25, 27, 28, 30.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.
எண்கள்: 1, 3, 4.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்யவும். விநாயகரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 11-ல் கேதுவும் உலவுவதால் குடும்ப நலம் சீராக இருந்துவரும். கற்பனை வளம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கும் செழிப்புக் கூடும். வியாபாரம், கணிதம், தரகு, கமிஷன் ஏஜன்ஸி துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண வாய்ப்பு உருவாகும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்காது. விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகள் சேரும். 25-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. 26-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. என்றாலும் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28, 30.
திசை: வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7.
பரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே..
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சனி, 10-ல் கேது உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க நேரலாம். நண்பர்கள், உறவினர்களால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வார நடுப்பகுதியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். வாரப் பின்பகுதியில் பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். உழைப்பு வீண்போகாது. கலைஞர்களுக்கு 24-ம் தேதி வரை சுபிட்சம் நிறைந்திருக்கும். அதன் பிறகு சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் எதிர்ப்புகள் கூடும். 26-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு நல்ல திருப்பம் உண்டாகும். பொது நலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28, 30.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: துர்கையம்மனையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் சுக்கிரன், 6-ல் சூரியனும் புதனும் உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது ஈடேறும். பணப்புழக்கம் திருப்தி தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். சுகம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். 5-ல் சனி இருப்பதும் 9-ல் கேது உலவுவதும் சிறப்பாகாது. பிள்ளைகளாலும் தந்தையாலும் இடர்ப்பாடுகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும். 25-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவது நல்லது. எதிர்பாராத பொருள் சேரும். 26-ம் தேதி முதல் வாழ்க்கைத் துணைவரால் செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 27, 28, 30.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு ,பச்சை.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்:
விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் உலவுவதால் வீர தீர பராக்கிரமம் வெளிப்படும். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள், வழக்குகள் ஆகியவற்றில் அனுகூலமான திருப்பமும் வெற்றியும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். தந்தை நலம் சீராகவே இருந்துவரும். தாய் நலனில் கவனம் தேவை. முன்பின் தெரியாதவர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. 25-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 26-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். மாணவர்கள் வளர்ச்சி காண வழிபிறக்கும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 25, 30.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்:
சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். நாகரை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சனியும், 4-ல் புதனும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகமாகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். சூரியன், செவ்வாய், குரு, ராகு, கேதுவின் நிலை சிறப்பாக இல்லாததால் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகிவருவது நல்லது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். 25-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிச. 25, 27, 28.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்:
செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் தொடர்ந்து செய்வது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் வலுத்திருக்கிறார். சூரியன், குரு, கேதுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். மன மகிழ்ச்சி கூடும். கலைத் துறை ஆக்கம் தரும். பெண்களது எண்ணம் ஈடேறும். ஆடை, அணிமணிகளால் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணியாளர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத் திறமை கூடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், தந்தையால் அனுகூலம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 25-ம் தேதி முதல் பணப் புழக்கம் அதிகரிக்கும். 26-ம் தேதி முதல் விஞ்ஞானம், எழுத்துத் துறைகள் லாபம் தரும்.
அதிர்ஷ்ட தேதிகள்: டிசம்பர் 27, 28, 30.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்:
திருமுருகனையும், துர்கையம்மனையும் தொடர்ந்து வழிபடவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago