மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பது விசேஷம். குரு பலம் ஓங்கியிருக்கிறது. ராகுவும் அனுகூலமாகச் சஞ்சரிக்கிறார். குருவும் சூரியனும் பரிவர்த்தனை பெறுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். உயர் பதவிகள் தேடிவரும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
செலவுகள் சற்று அதிகமாகும். சிக்கனம் தேவை. நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கணவன்- மனைவி உறவு நிலை சீராக இருக்கும். சுப காரியங்கள் நிகழும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். 20-ம் தேதி முதல் குரு 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பொருளாதாரச் சிக்கல் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 21, 23.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.
எண்கள்: 1, 3, 4, 9.
பரிகாரம்: அஷ்டம சனிக்குப் பிரீதி செய்யவும். 20-ம் தேதி முதல் குரு வழிபாடு அவசியம்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 11-ல் கேதுவும் உலவுவதால் அளவோடு நலம் உண்டாகும். வார முன்பகுதியில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
ஜலப்பொருட்கள் லாபம் தரும். மருத்துவர்களது நிலை உயரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். 20-ம் தேதி முதல் குரு 5-ம் இடம் மாறுவதால் மக்கள் நலம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதாரம் சம்பந்தமான தொழில் ஆக்கம் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். புத்திசாலித்தனம் கூடும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிச 18, 20, 23.
திசை: வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டோத்திரம் நல்லது. ஸ்ரீசூக்தம் படிப்பதும் கேட்பதும் சிறப்பு.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். ஜலப்பொருட்கள் லாபம் கொண்டு வரும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். தொழிலாளர்களது நிலை உயரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும்.
கலைத்துறையினர், மாதர்களுக்கு சுபிட்சம் கூடும். மன உற்சாகம் பெருகும். 20-ம் தேதி முதல் குரு 4-ம் இடம் மாறி தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் குறையும். நிலபுலங்களால் ஓரளவுக்கு ஆதாயம் கிடைக்கும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். பொருள் வரவு சற்று கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள் டிசம்பர்: 18, 20, 21.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகுவுக்குப் பிரீதியாக முருகன், துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் செவ்வாயும் ராகுவும், 4-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் புதனும் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். புதிய நிலம், மனை, வீடு, வாகனம் ஆகிய சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு வாரப்பின்பகுதியில் கிடைக்கும்.
இயந்திரப்பணிகள் ஆதாயம் கொண்டுவரும். பயணத்தால் நலம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பிள்ளைகளாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். 20 -ம் தேதி முதல் குரு 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிள்ளைகளால் மன அமைதி குறையும். மார்பு, நுரையீரல் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 20, 21, 23.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. சூரியனும் புதனும் 5-ல் இருந்தாலும் குருவின் பார்வையைப் பெறுவது நல்லது. கணவன்-மனைவி இடையே கருத்தொற்றுமை ஏற்படும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளால் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். 2-ல் செவ்வாயும் ராகுவும், 4-ல் சனியும் 8-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் அமைதி காண அரும்பாடுபட வேண்டிவரும். பேச்சிலும், செயலிலும் நிதானம் தேவை.
உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம் தேவை. விஷ பயம் உண்டாகும். 20-ம் தேதி முதல் குரு 2-ம் இடம் மாறுவதால் பண வரவு கூடும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். குடும்ப நலம் சீராகும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். பேச்சில் திறமை வெளிப்படும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கடன் தொல்லை குறையும். மாணவர்களது நிலை உயரும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்களுக்கு மதிப்பு உயரும். தாய் வழி தாத்தாவுக்கு ஆரோக்கியம் பாதிக்கும். கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 21, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: விநாயகர் அகவல் மற்றும் விநாயகர் காயத்ரி சொல்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி புதன் 4-லும், சுக்கிரன் 2-லும் உலவுவது விசேஷம். சனி 3-ல் இருப்பதும் விசேஷம். குடும்பத்தில் குதூகலம் கூடும். பொருளாராதார நிலை உயரும். பேச்சில் இனிமை கூடும். முக வசீகரத்தால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் ஏற்படும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வருவாய் கூடும். திறமை வீண்போகாது. நண்பர்கள், உறவினர்கள் உதவ முன்வருவார்கள். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும்.
எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற இனங்கள் ஆக்கம் தரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலால் ஆதாயம் கிடைக்கும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். 20-ம் தேதி முதல் குரு ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. மக்கள் நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சல் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிக்ள்: டிசம்பர் 18, 20, 21.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago