நவம்பர் 10: தீபாவளி
சனாதன இந்து மதத்தில் பல பண்டிகைகள் உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு புராண வரலாறு உண்டு. தனித்தன்மை உண்டு. அனைத்து பண்டிகைகளை ஆழ்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு ஆன்மிகம் கலந்த சமுதாயச் சிந்தனையும் அடிப்படை ஆதாரமாக இருக்கும்.
எல்லாப் பண்டிகைகளும் ஒவ்வொரு தேவதா மூர்த்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்ததே. அந்த குறிப்பிட்ட தேவதா மூர்த்திக்கு அன்று விசேஷ பூஜை புனஸ்காரங்கள், நைவேத்யங்கள் சொல்லப்பட்டிருக்கும்.. உதாரணத்திற்கு, சிவராத்திரி சிவனை மையமாகவும், வைகுண்ட ஏகாதசி திருமாலை பிரதானமாகவும், விநாயக சதுர்த்தி பிள்ளையாரை அடிப்படையாகவும், கிருஷ்ண ஜயந்தியில் கண்ண பிராணும், இராம நவமியில் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியும், நவராத்திரி பண்டிகை அம்பாள் ஸ்வரூபவத்தை ஆராதிப்பதாகவும், சங்கராந்தி சூர்யநாராயண ஸ்வாமியை பூஜிப்பதாகவும் அமைந்துள்ளதை நாம் நன்கு அறிவோம். அவ்வாறே ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேறு விதமான பட்சணங்கள் நைவேத்யமாகச் சொல்லப் பட்டுள்ளதும் நமக்குத் தெரியும்.
தீபாவளியைப் பொருத்தவரை எந்தக் குறிப்பிட்ட கடவுளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் சொல்லப்படவில்லை. தீபாவளியின் முக்கிய அம்சம் என்னவெனில் ஸ்நானம் செய்வதே. குளியலை மையமாக வைத்துதான் தீபாவளி இல்லம்தோறும் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி அன்று காலையில் நாம் அன்பர்களையும் நண்பர்களையும் சுற்றார்களையும் சந்திக்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்றுதான் கேட்கிறோம்.
கங்கா ஸ்நானம் துலாஸ்நானம்
தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்துக்கொண்டு் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும். அன்று வெந்நீரில் அந்த முகூர்த்தத்தில் கங்கை வசிப்பதாக சாஸ்திரம் சொல்லுகிறது. அதற்காகத்தாத்தான் இதற்கு “கங்கா ஸ்நானம்” என்று பெயர் வந்துள்ளது.
இந்த ஒரு ஸ்நானத்துடன் நிற்கவில்லை. அன்று மற்றுமொரு குளியலும் சொல்லியுள்ளது. அன்று காலை சூரியோதயத்திற்குப் பிறகு ஆறு நாழிகைக்குள் (அதாவது சுமார் காலை 9 மணிக்குள்) காவேரி போன்ற நதிகளிலோ அல்லது குளத்திலோ அல்லது கிணற்றிலோ அல்லது குழாயடியிலோ குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ஸ்நானத்திற்கு பெயர் “துலா ஸ்நானம்”.
முதலாவதாக செய்யும் கங்கா ஸ்நானத்தின்போது விஷ்ணு பகவானை வணங்கவேண்டும். இரண்டாவது குளியலின்போது பரமேஸ்வரனை நினைக்க வேண்டும் என பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
தீபாவளி சொல்லும் செய்தி
கிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்ட போது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். “எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால் எனது மரண தினத்தை மக்கள் எல்லாரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாட வேண்டும்” என்று கோரி இறப்பெய்தினான். அவனது கோரிக்கையை ஏற்று பூதேவியும் கிருஷ்ணனும் அதை வழிமொழிந்தனர்.
நமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும், கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தறுவாயில் உணர்ந்தான். ஒரு அசுரன் அத்தனை ஞானநிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினைவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி.
நம் இதயம் எப்பேர்ப்பட்ட துயரிலும் இருளிலும் இருக்கும்போதும் நமது புன்னகையால் இந்த உலகில் ஒளியை ஏற்றுவோம் என்பதைத்தான் தீபாவளி தீபங்கள் காலம்காலமாக தனது பிரகாசத்தைக் காட்டிச் சொல்கின்றன.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
4 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
17 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago