மகதப் பேரரசின் தலைநகராக விளங்கியது பீகாரில் உள்ள ராஜகிரி எனும் நகரமாகும். இங்கு இயற்கையின் பேரெழிலுடன் கூடிய ஐந்து மலைகள் உள்ளன. அவை விபுலாசலகிரி,இரத்தனகிரி, உதயகிரி,சுவர்ணகிரி,வைபவகிரி. இவ்விடத்தில் இயற்கையான நீர்நிலைகளும் புகழ் பெற்ற வெந்நீர் ஊற்றுகளும் காணப்படுகின்றன.
கவுதம புத்தர் இங்கே தவம் இருந்து, தன் கொள்கைகளைப் பரப்பியுள்ளார். பவுத்தத்தின் முதல் மாநாட்டை புத்தர் இங்கு நடத்தியுள்ளார். சீனப் பயணிகள் யுவான் சுவாங், பாகியான் போன்றவர்களின் குறிப்புகளில் ராஜகிரியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். ராஜகிரி அருகில் நாளந்தா அமைந்துள்ளது. உலகச் சுற்றுலாப் பயணிகளின் மையமாகவும் ராஜகிரி விளங்குகிறது. ராஜகிரி சமணர்களின் சித்த சேத்திரமுமாகும்.
இந்தப் புனித மண்ணில் இருபதாவது தீர்த்தங்கரரான பகவான் முனிசுவிரதரின் கர்ப்ப, ஜன்ம, துறவற, கேவல் கலியாணம் ஆகிய நான்கு கலியாணங்கள் நடைபெற்றுள்ளன. மாமுனிகள் பலர் தவம் நோற்று, முக்தி அடைந்ததும், பதினொரு ஞான மாமுனிகளான கணதரர்கள் முக்தியடைந்ததும் இந்தத் தலமே.
ராஜகிரியில் பகவான் மகாவீரர், முனிவரான பின் பதினான்கு முறை மழைக்காலத் தங்குதலை மேற்கொண்டுள்ளார். அவர் கேவல ஞானநிலையை அடைந்த பின்னர் அவரின் முதல் சமவசரணம், விபுலாசல மலை மீது அமைக்கப்பட்டது. அங்கிருந்துதான் மாதவத் தலைவன் மகாவீரர் தன் திவ்யத்தொனி வாயிலாக முதல் அறப் பேருரையை உலகம் உய்வதற்காக முழங்கினார். அப்போது பேரறிஞர் இந்திரபூதி கவுதமர் தனது ஐந்நூறு மாணவர்களுடன் வந்து மகாவீரரின் சிறப்பைக் கண்டு வியந்து பகவானின் முதல் கணதரராக ஆனார்.
முனிசுவிரதப் பெருமானின் நினைவிடம்
விபுலாசல மலைப்பாதையில் மகாவீரரின் பாதக் கமலங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது மிகப் பழமையானது. இதன் அருகில் அனைத்து தீர்த்தங்கரர்களின் திருவடிகளும் செதுக்கப்பட்டுள்ளன. மலையில் இழுவை இயந்திரம் இயங்குகிறது. மூவுலகை வென்ற முனிசு விரதப் பெருமானின் நினைவிடம் அமைந்துள்ளது. மலையில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.பகவான் பத்மபிரபர், மகாவீரர்ஆகியோர் சிலைகள் உள்ளன. புத்தமதத்தின் விஸ்வ சாந்தி ஸ்தூபியும் இங்கே அமைந்துள்ளது.
ரத்தினகிரி மலையில் தீர்த்தங்கரப் பெருமக்கள் அபினந்தர், சந்திரப்பிரபர், சாந்திநாதர், நேமிநாதர், பார்சுவநாதர் ஆகியோரின் திருப்பாதங்கள் வடிக்கப்பட்டுள்ளன. உதயகிரியில் மகாவீரரின் திருப்பாதங்கள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கோயிலில் பகவான் பார்சுவநாதர் அருள் தருகிறார்.
சுவர்ணகிரியில் மூன்று ஜைன ஆலயங்கள் அமைந்துள்ளன. ஆதிபகவன், மகாவீரர் ஆகியோரின் திருப்பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வைபவகிரி செல்லும் வழியில் குகைகள் இருக்கிறன. இதில் சமணத் தெய்வங்களின் திருமேனிகள் செதுக்கப்பட்டு பக்திப் பரவசமூட்டுகின்றன. இவ்விடத்தைக் கடந்து சென்றால் கௌதம கணதரரின் திருப்பாதங்கள் காட்சி தருகின்றன.வைபவகிரியில் அகழ்வாராச்சியின் போது ஒரு பெரிய கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கோயில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதில் தீர்த்தங்கரர்கள் ஆதிபகவன் உட்பட பல அழகிய தெய்வத் திருமேனிகள் கிடைத்தன.
ராஜகிரி நகரிலுள்ள லால் மந்திர் எனும் கோயில் சிறப்பானது. பன்னிரண்டு அடி உயரத்தில் மைந்தர் பகவான் முனிசுவிரதப் பெருமான் சிலைவடிவாக அருள் பொழிவது பரவசப்படுத்துகிறது. ராஜகிரி சித்தசேத்திரம் என்பதால் பக்தர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
10 days ago
ஆன்மிகம்
12 days ago