மகா சிவராத்திரி ; ஐஸ்வர்யம் தரும் வில்வாஷ்டகம் 

By வி. ராம்ஜி

மகா சிவராத்திரி நன்னாளில், வில்வாஷ்டகம் சொல்லி வில்வநாயகனான சிவபெருமானை வணங்குவோம். சகல காரியங்களிலும் வெற்றியைத் தந்தருளுவார் சிவபெருமான்.

மாசி மாதம் மகத்தான மாதம். மங்கல காரியங்களை நடத்துவதற்கு உண்டான மாதம். கலைகளையும் கல்வியையும் பயிலுவதற்கு உரிய மாதம். வேத பாராயணங்களையும் மந்திர ஜபங்களையும் கற்றறிவதற்கு உகந்த மாதம். ஹோமங்கள் செய்வதற்கு உரிய மாதம் என்றெல்லாம் போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

மாசி மாதத்தின் அமாவாசை விசேஷம். மாசி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தின் மகம் நட்சத்திர நாள், உன்னதமானது. அதேபோல் மாசி மாதத்தின் சிவராத்திரி வழிபாட்டுக்கு உரியது. மாசி சிவராத்திரியைத்தான் மகா சிவராத்திரி என்று போற்றுகிறோம்.

அம்பிகைக்கு நவராத்திரி சிவனாருக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி என்பார்கள். மாசியில் வரும் மகா சிவராத்திரி நன்னாளில் விடிய விடிய சிவனாருக்கு பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் அமர்க்களப்படும்.

11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. இந்த நாளில், சிவாலயம் செல்லுவோம். இரவில் நடைபெறும் பூஜையைக் கண்ணாரத் தரிசிப்போம். அப்போது, வில்வாஷ்டகம் பாராயணம் செய்வோம். சிவனாருக்கு வில்வம் சார்த்தி வேண்டிக்கொள்வோம்.

இதோ... வில்வாஷ்டகம்...

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரினேத்ரம் ச த்ரியாயுதம்
த்ரிஜன்ம பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

த்ரிசா கைஃ பில்வபத்ரைச்ச அச்சித்ரைஃ கோமலை ஸுபை:
தவபூஜாம் கரிஷ்யாமி ஏக வில்வம் சிவார்ப்பணம்

கோடி கன்யா மஹாதானம் திலபர்வத கோடய:
காம்சனம் க்ஷீலதானேன ஏக வில்வம் சிவார்ப்பணம்

காசி க்ஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்சனம்
ப்ரயாகே மாதவம் த்ரூஷ்ட்வா ஏக வில்வம் சிவார்ப்பணம்

இம்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஷ்வரா
நிக்தம் ஹௌஷ்யாமி தேவே ஏக வில்வம் சிவார்ப்பணம்

ராமலிம்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்றுதம் ததா
தடாகானிச ஸம்தானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அகம்ட பில்வபத்ரம் ச ஆயுதம் சிவபூஜனம்
க்றுதம் னாம ஸஹஸ்ரேண ஏக வில்வம் சிவார்ப்பணம்

உமயா ஸஹதேவேச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக வில்வம் சிவார்ப்பணம்
ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தசகூபயோ:
யஜ்னகோடி ஸஹஸ்ரஸ்ச ஏக வில்வம் சிவார்ப்பணம்

தம்தி கோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத சதக்ரதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வாணாம் தர்சனம் புண்யம் ஸ்பர்சனம் பாபனாசனம்
அகோர பாபஸம்ஹாரம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

ஸஹஸ்ரவேத பாடேஷு ப்ரஹ்மஸ்தாபன முச்யதே
அனேகவ்ரத கோடீனாம் ஏக வில்வம் சிவார்ப்பணம்

அன்னதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோப நயனம் ததா
அனேக ஜன்மபாபானி ஏக வில்வம் சிவார்ப்பணம்

பில்வஸ்தோத்ரமிதம் புண்யம் ய படேத் சிவ ஸன்னிதௌ
சிவலோகமவாப்னோதி சிவேன சஹ மொததே

வில்வம், சிவனாருக்கு உகந்தது. வில்வத்தில் மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கிறாள் என்பதாக ஐதீகம். சிவனாரை வில்வநாயகன் என்றே போற்றுகிறது புராணம். 11ம் தேதி வியாழக்கிழமை, மகாசிவராத்திரியில், மகாதேவனான சிவத்தை வணங்குவோம். வில்வாஷ்டகம் சொல்லுவோம். சகல ஐஸ்வரியங்களையும் பெறுவோம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

மேலும்