வாராஹியை உரிய மந்திரங்களைச் சொல்லி தேவியைத் தொழுவோம். வாழ்வில் நல்ல திருப்பங்களைத் தந்தருளுவாள் வாராஹி. மங்காத செல்வம் தந்து காத்தருளுவாள் தேவி.
சப்தமாதர்களில் நடுநாயகமாகத் திகழ்கிறாள் வாராஹி தேவி. படைகளின் தலைவியாகத் திகழ்கிறாள் தேவி என்கிறது வாராஹி புராணம்.
வலிமை மிக்கவள். நமக்கெல்லாம் வலிமையைக் கொடுப்பவள்.
வாராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. பஞ்சமி திதியில் வாராஹியை வழிபடுவதும் தரிசிப்பதும் மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்வதும் உன்னதப் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
வீட்டில் விளக்கேற்றி வாராஹியின் மூலமந்திரத்தைச் சொல்லி, ஏதேனும் இனிப்பை நைவேத்தியம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டியதையெல்லாம் தந்தருளுவாள் தேவி.
வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி
ஸ்வ்ப்ணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
ஓம் ஐம் க்லெளம் ஐம்
நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வாராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
என்று சொல்லி வழிபடலாம்.
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் மந்திரத்தை 108 முறை ஜபித்து தேவியை வணங்கித் தொழுதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
ஓம் – ஸ்ரீம் – ஹ்ரீம் – க்லீம் – வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம் – ஸித்திஸ்வரூபிணி – ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.
எனும் மந்திரத்தைச் சொல்லி வந்தால், வீட்டில் தனம் தானியம் பெருகும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள். அதேபோல்,
லூம் வாராஹி லூம் உன்மத்த பைரவீம்
பாதுகாப்பாம். ஸ்வாஹா
எனும் மந்திரத்தை தினமும் சொல்லி வரலாம். அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் இந்த மந்திரத்தைச் சொல்லி வாராஹி தேவியை வணங்கி வந்தால், எதிர்ப்புகள் விலகும். தடைகள் அகலும் என்கிறார்கள் வாராஹி வழிபாட்டுக் குழுவினர்.
பஞ்சமி திதி நாளான இன்று 3ம் தேதி புதன்கிழமையில், வாராஹி தேவியை போற்றுவோம். துதிப்போம். மனதாரப் பிரார்த்திப்போம். மங்கல காரியங்களைத் தருவாள். மங்காத செல்வங்களையெல்லாம் வழங்குவாள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
39 mins ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago