மகாலக்ஷ்மி தாயாரை வணங்கி வந்தால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
பணமில்லாமலேயே வங்கி முதலான கடனைக் கொண்டு வீடு கட்டும் யோகமும் பலருக்கு உண்டு. அதேபோல், பணம் காசுக்குக் குறைவே இல்லை என்றிருப்பவர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட ஆசை இருந்தாலும் யோகம் அமையாமல் தள்ளிப் போவதும் உண்டு. சொந்த வீடு எனும் யோகத்தைத் தந்தருளுபவர்தான் வாஸ்து பகவான்.
பொதுவாகவே கட்டிடகாரகன் என்று சுக்கிர பகவானைச் சொல்லுவார்கள். சுக்கிர யோகம் ஒருவருக்கு வந்துவிட்டால், சகல சம்பத்துகளும் கிடைப்பதற்கான வழிவகைகள் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சுகபோகங்களுக்கு அதிபதியாகத் திகழ்பவர் சுக்கிர பகவான். வெள்ளிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானுக்கு தீபமேற்றி ஒன்பது முறை நவக்கிரகத்தை வலம் வந்து வேண்டி வந்தால், சுக போக வாழ்க்கையைத் தந்தருளுவார் சுக்கிரன்.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான், உச்சமாக இருந்தால், இந்திர லோகத்துக்கு இணையான மிகப் பிரமாண்டமான வீடு அமையும் என்பது ஐதீகம்.
» திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் மாசி பிரம்மோத்ஸவ பெருவிழா
» ’என்னைக் கூப்பிடுங்கள், நான் வருகிறேன்!’ என்கிறார் ஷீரடி சாயிபாபா
சுக்கிர பகவானையும் ஸ்ரீமகாலக்ஷ்மி தாயாரையும் உரிய ஸ்லோகங்கள் சொல்லி, தொடர்ந்து வேண்டி வந்தால், வீடு மனை யோகம் நிச்சயம் அமையும் என்கிறது சாஸ்திரம்.
வெள்ளிக்கிழமை என்பதை சுக்கிர வாரம் என்று சொல்லுவார்கள். வெள்ளிக்கிழமைகளில், காலையும் மாலையும் விளக்கேற்றி, சுக்கிர ஸ்லோகம் சொல்லியும் ஸ்ரீமகாலக்ஷ்மி ஸ்தோத்திரமும் பாராயணம் செய்து வருவோம்.
ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் சொல்லியும் மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் சொல்லியும் வேண்டிக்கொள்ளலாம்.
அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று, நவக்கிரகத்தில் உள்ள சுக்கிர பகவானை மனதார வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை சுற்றி வந்து பிரார்த்தனைகள் மேற்கொள்ளவேண்டும். அதேபோல், பெருமாள் கோயிலுக்குச் சென்று மகாலக்ஷ்மி தாயாருக்கு வெண்மை நிற மலர்கள் சார்த்தி, லக்ஷ்மி அஷ்டோத்திரமும் கனகதாரா ஸ்தோத்திரமும் ஜபித்து பிரார்த்தனைகளை தாயாரிடம் வைத்து, வேண்டுவோம். வேண்டியதையெல்லாம் தருவாள் தாயார். நினைத்ததையெல்லாம் முடித்து வைப்பாள் மகாலக்ஷ்மி தாயார்.
மகாலக்ஷ்மி தாயாரை வணங்கி வந்தால், சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago