ஓஷோ சொன்ன கதை: வானத்தை மறைக்கும் மேகங்கள்

By சங்கர்

ஒருகாலத்தில் புகழ்பெற்ற ஜென் குரு ஒருவர் இருந்தார். அவர் பெயர் டோஷான். அவரைக் கடவுள்கள் பார்ப்பதற்கு விரும்பினர். அவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.

அவர் வாழ்வதாகச் சொல்லப்பட்ட ஆசிரமத்துக்குக் கடவுள்கள் ஒரு நாள் சென்றனர். டோஷான் அவர்களது கண்களுக்குப் புலப்படவேயில்லை. அவர் அமர்ந்திருந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தைப் பக்கவாட்டாகக் கடந்தனர். அவர்களால் டோஷானை உணரவே இயலவில்லை.

ஜென் குரு டோஷான் அவ்வளவு காலியாக இருந்தார். தன்னையே அரூபமாக்கிய ஒரு மனிதனைப் பார்த்து கடவுள்களுக்கோ வியப்பு!

கடவுள்கள் ஒரு வேடிக்கையைப் புரிவதற்குத் திட்டமிட்டனர்.

டோஜான் காலை நடை சென்றுவிட்டுத் திரும்பி வரும் ஆசிரமத்தின் சமையலறைக்குள் புகுந்து, கையளவு அரிசியையும் கோதுமையையும் பாதையில் சிதறவிட்டனர்.

ஒரு பவுத்த மடத்தைப் பொருத்தவரை அரிசியையும் கோதுமையையும் கொட்டுவதென்பது பாவகாரியமாகும். இந்த பூமியில் படைக்கப்பட்டிருக்கும் அனைத்தும் புனிதமானது. அதனால் மடாலயத்தில் எதுவும் வீணாக்கப்படுவதேயில்லை.

கடவுளர்கள் திட்டமிட்டபடியே குரு டோஜான் அதிகாலை நடைப்பயிற்சிக்குப் பின்னர் மடாலயத்தின் சமையலறைக்கு வந்தார். கீழே கிடந்த தானிய மணிகளைப் பார்த்து வியந்துபோனார். “ யார் இப்படி கவனமின்றி மரியாதைக்குறைவான காரியத்தை இழைத்தது?” என்று எண்ணினார். எண்ணம் தோன்றியவுடன் டோஷானும் தோன்றிவிட்டார்.

ஒரு எண்ணமோ கருத்தோ உருப்பெற்றவுடன் மனம் தோன்றிவிடுகிறது. அந்தக் களங்கமற்ற நீலவானத்தில் ஒரு மேகம் தோன்றிவிட்டது. தோன்றாதவனாக இருந்த டோஷான் தோன்றும் மனிதனாகிவிட்டான்.

அந்த எண்ணம் மறைந்ததும் டோஷான் மறைந்துவிட்டார். மேகமும் மறைந்துவிட்டது.

ஒரு எண்ணமோ கருத்தோ நம்மிடம் எழும்போது ஒரு மேகம் உருவெடுக்கிறது. ஒரு மேகம் மட்டுமல்ல. எண்ணங்கள் உதிக்க உதிக்க லட்சக்கணக்கான மேகங்கள் நம்மை அடுக்கடுக்காக நம்மை மூடிவிடுகின்றன. உள்ளிருக்கும் களங்கமற்ற வானம் முழுமையாக மூடப்பட்டுவிடுகிறது. அந்த வானத்தை நம்மால் பார்க்கக்கூட முடிவதில்லை.

நமது மனம் தொடர்ந்து எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் ஆசாபாசங்களால் நிறைந்து வழிகிறது.

அதனால் காலியாகுங்கள். இளைப்பாறுங்கள். குரு டோஷானைப் போல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்