தை கடைசி சனி; சனி பகவானுக்கு எள் தீபம்! 

By வி. ராம்ஜி

தை மாத சனிக்கிழமையில், சனீஸ்வரரின் காயத்ரியைச் சொல்லுங்கள். தை கடைசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி வணங்குங்கள். காகத்துக்கு எள் சாதமிடுங்கள். தோஷங்கள் அனைத்தும் விலகும். சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

நவக்கிரகங்களில் மிக முக்கியமான கிரகம் சனி பகவான். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவர் எனும் பெருமை கொண்டவர் சனி பகவான். ராகு - கேது பெயர்ச்சிக்கோ குருப்பெயர்ச்சிக்கோ பெரிதும் பயப்படமாட்டோம். ஆனால் சனிப்பெயர்ச்சி என்றால் என்னாகுமோ என்ன செய்வாரோ என்று கலங்கி விடுகிறோம். காரணம்... நமக்கு சோதனைகளையும் தருபவர் அவர்தான். அதேசமயம் நம்மை சாதனை மனிதராக்குபவதும் அவர்தான்.

சனி பகவான். நமக்குச் சோதனைகளைத் தருவார். நம்மைச் சோதனைக்குள்ளாக்குவார். இவை அனைத்துமே நம்மைத் திருத்துவதற்காகத்தான் என விவரிக்கிறார்கள் ஆச்சார்யர்கள். எனவே சனி பகவானை நினைத்து எந்தச் சூழ்நிலையிலும் நாம் பயப்படத் தேவையில்லை.

பகவானின் காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், சனி கிரக தோஷங்களனைத்தும் விலகும். தொழில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். நோய்கள் நீங்கப் பெற்று ஆனந்தமாக வாழச் செய்வார் சனீஸ்வர பகவான்.

சனிக்கிழமை தோறும், எள் தீபமேற்றி, சனீஸ்வரரை வழிபட்டு வந்தால், சனியின் பிடியில் இருந்தும் சனியின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம். விடுபடலாம். விமோசனம் பெறலாம்.

அப்போது, சனி பகவானின் காயத்ரியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்யுங்கள். சனிக்கிழமை என்றில்லாமல் எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.

தை மாத கடைசி சனிக்கிழமையில், சனி பகவானுக்கு உரிய காயத்ரியைச் சொல்லி வேண்டுவோம். எள் தீபமேற்றி வழிபடுவோம்.

”ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த பிரசோதயாத்”

அதாவது, காகத்தை வாகனமாகக் கொண்ட சனி பகவானே... கட்க என்கிற ஆயுதத்தால் மங்லம் பொங்குகிற காரியங்களைச் செய்து கொடுத்து அருளுவாய். குறைவின்றி வாழ்வதற்கு அருள் புரிவாய்’ என்று அர்த்தம்.

இந்த சனீஸ்வர காயத்ரி மந்திரத்தைச் சொல்லி, காகத்துக்கு எள்ளும் சாதமும் கலந்த உணவிடுவோம். நவக்கிரகத்தில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு
எள் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சனியால் விளையும் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். தொழிலில் இருந்த தடைகளையெல்லாம் தகர்ந்து, முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழலாம். நம் முந்தைய வினைகளையெல்லாம் நீக்கி அருளுவார் சனீஸ்வரர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்