தீராத நோயையும் தீர்த்து வைக்கும் திருமால் மந்திரங்கள்! 

By செய்திப்பிரிவு

மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். குடும்பத்தில் தம்பதி ஒற்றுமையை மேம்படுத்தும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி.

வழிபாடுகள் மகத்தான பலன்களைக் கொடுப்பவை. மனமொருமித்து நாம் செய்கிற பூஜைக்கும் வலிமை உண்டு என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். ஐந்தெழுத்து மந்திரமோ எட்டெழுத்து மந்திரமோ... நாம் அவற்றைச் சொல்லச் சொல்ல, அந்த மந்திரச் சொல்லுக்குள் இருக்கிற அதிர்வலைகள், நமக்குள்ளேயும் நமக்கு வெளியேயும் நம்மைச் சுற்றியும் வியாபித்து நமக்கு அரண் போல் இருந்து காத்தருளும் என்கிறது சாஸ்திரம்.

மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் துவாதசியும் பெருமாள் வழிபாட்டுக்கு மிக முக்கியமான திதிகளாக சொல்லப்பட்டிருக்கின்றன. நெல்லையைச் சுற்றியுள்ள நவதிருப்பதிகள் திருத்தலத்துக்குச் சென்று உரிய காயத்ரியைச் சொல்லி வழிபடுவது காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் கொடுக்கும். தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தி அருளும்.

நோய்வாய்ப்பட்டவர்களுக்காக, அவர்கள் நலம் பெற வேண்டும் என்பதற்காக, இந்த மகாவிஷ்ணு காயத்ரியைச் சொல்லி வழிபட்டு வந்தால், பிரார்த்தித்து வந்தால், விரைவில் குணமாவார்கள். கணவன்மார்களின் ஆயுள் கூடும். தாலி பாக்கியம் நிலைக்கும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

குடும்பத்தில் தம்பதி ஒற்றுமையை மேம்படுத்தும். இல்லத்தில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும் என்பது உறுதி எனத் தெரிவிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

ஓம் நாராயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியை ஆத்மார்த்தமாக சொல்லி வாருங்கள். தொடர்ந்து ஒவ்வொரு ஏகாதசியிலும் சனிக்கிழமைகளிலும் 11 முறை 24 முறை மகாவிஷ்ணுவின் காயத்ரியை மனதாரச் சொல்லி திருமாலை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் வளமும் நலமும் தந்தருளுவார் பெருமாள்.

ஓம் த்ரைலோக்ய மோஹனாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கித் தருவார் திருமால்.

சனிக்கிழமைகளில் காலை சூரியோதயத்தின் போது, குளித்து, பூஜையறையில் விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி, வேண்டிக்கொள்ளுங்கள். புளியோதரை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். அருளும் பொருளும் அள்ளித் தந்தருளுவார் மகாவிஷ்ணு.

ஓம் விஷ்ணு தேவாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

என்ற மகாவிஷ்ணுவின் காயத்ரியை ஏகாதசி துவாதசி நாட்களில் 108 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். துளசியால், பெருமாள் படத்துக்கோ விக்கிரகத் திருமேனிக்கோ அர்ச்சித்து வழிபடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்