திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்! 

By வி. ராம்ஜி

ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான சிவனார்; குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்தாலே, தரிசித்தாலே மகா புண்ணியம். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். சனீஸ்வரரின் அருளைப் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

குரு வியாழ பகவானுக்கு உரிய க்ஷேத்திரங்களில் ஒன்றான திருச்செந்தூருக்கு வந்து, செந்திலாண்டவரைத் தரிசித்தால், குருவருள் கிடைக்கப் பெறலாம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது திருச்செந்தூர் திருத்தலம். கடலோரத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம். சூரபத்மனை அழிப்பதற்காக, சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் என்கிறது புராணம்.

சூரபத்மனை அழிப்பதற்காக, தேவர்களின் படைத்தளபதியாக நியமிக்கப்பட்டார் முருகப்பெருமான். வழியில் வந்துகொண்டிருந்தபோது, தாரகாசுரனை அழித்தார். கிரெளஞ்ச மலையைப் பிளந்தழித்தார். அப்போது செந்தூர் திருத்தலத்துக்கு வந்து, தன் படை பரிவாரங்களுடன் தங்கினார். பத்மாசுரனை அழித்தார்.

அப்போது, அங்கே... தந்தையான, உலகுக்கே தந்தையான சிவபெருமானை வணங்கி வழிபடுவதற்காக, தேவதச்சனான மயனிடம் ஆலயம் ஒன்றை எழுப்பித்தரப் பணித்தார். அதன்படி கடலோரத்தில், மயன் அமைத்த ஆலயமே திருச்செந்தூர் திருத்தலம்.

வியாழ பகவானால் வணங்கி வழிபடப்பட்ட திருத்தலம் எனும் பெருமை கொண்டது என விவரிக்கிறது ஸ்தல புராணம். அதனால்தான் திருச்செந்தூர் குரு பகவான் திருத்தலம் என்றும் வியாழ க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது.

கடல் அலைகள் மோதிக்கொண்டே இருக்கும் தலம் திருச்செந்தூர். அதனால், இந்தத் தலத்துக்கு திருச்சீரலைவாய் எனும் பெயரும் உண்டு. சூரனை சம்ஹரித்த தலம் என்பதால் ஜெயந்திபுரம் என்றும் திருநாமம் அமைந்தது. ராமாயண காலத்துக்கு முந்தைய திருத்தலம் எனும் பெருமையும் திருச்செந்தூருக்கு உண்டு. இந்தத் தலத்துக்கு, கபாடபுரம் என்றொரு பெயரும் உண்டு. வால்மீகி ராமாயணத்தில், ‘கபாடபுரம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், ராமாயணத்துக்கு முந்தைய காலத்திலேயே திருச்செந்தூர் திருத்தலம் அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

முதல் பிராகாரத்தில், தெற்கில் ஜயந்தி நாதர் சந்நிதி அமைந்துள்ளது. குமாரவிடங்கப் பெருமான், ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் திருக்காட்சி தருகிறார். மேலும் தென்மேற்கில் ஸ்ரீவள்ளிக்கும் வடமேற்கில் ஸ்ரீதெய்வானைக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்திருக்கின்றன.

இந்தத் தலத்தின் முக்கியச் சிறப்பு... ஓம் எனும் பிரணவத்தை அடிப்படையாகக் கொண்ட தலம் இது. வாஸ்து விஷயங்களுடன் கட்டமைக்கப்பட்ட ஆலயம். அதனால்தானோ என்னவோ... மிகுந்த சக்தியுடனும் சாந்நித்தியுடனும் திகழ்கிறது திருச்செந்தூர் திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

திருச்செந்தூர் தலத்தை, வீரபாகு க்ஷேத்திரம் என்றும் போற்றுகிறார்கள். ஆலய அர்த்தமண்டபத்தில் வீரபாகுவும் வீர மகேந்திரரும் காவல் தெய்வங்களாக அமைந்திருக்கின்றனர். இந்தத் தலத்தில் வீரபாகுவுக்கு முதலில் பூஜை நடந்த பிறகுதான், முருகப் பெருமானுக்கு பூஜை நடைபெறுகிறது. அதேபோல், வீரபாகுவுக்கு ‘பிட்டு’ நைவேத்தியம் செய்யப்படுவதும் சிறப்புக்கு உரிய ஒன்று.

சிவபெருமானை வணங்குவதற்காக முருகப்பெருமான் எழுப்பிய திருச்செந்தூர் திருத்தலத்தில், குரு வியாழ க்ஷேத்திரத்தில், சனீஸ்வர பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

ஞானகுருவாக முருகப்பெருமான்; உலகுக்கே தந்தையான சிவனார்; குரு வியாழ பகவான், சனீஸ்வரர் என அமைந்திருக்கும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கு வந்தாலே, தரிசித்தாலே மகா புண்ணியம். குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம். சனீஸ்வரரின் அருளைப் பெறலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.

கடலோரத்தில்... செந்தூர் திருத்தலத்தில்... செந்திலாண்டவனாகக் குடிகொண்டிருக்கும் அற்புத க்ஷேத்திரத்தில்... முருகப்பெருமானை வனங்குவோம். சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து அருளுவார் செந்திலாண்டவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்