அனுமனை வழிபட்டால், காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அனுமன், ஆஞ்சநேயர், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்கள் கொண்டிருந்தாலும் ராம பக்த அனுமன் என்று சொன்னால், அகம் குளிர்ந்து போவாராம்.
‘ஜெய் அனுமன்’ என்று சொன்னால், நம் குரலுக்கு ஓடிவந்து நமக்கு அருளக்கூடியவர் ஆஞ்சநேயர் பெருமான் என்கிறார்கள் பக்தர்கள்.
வைஷ்ணவக் கோயில்களில், அனுமனுக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், அனுமனுக்கு தனிக்கோயில்களும் உள்ளன.
நாமக்கல் ஆஞ்சநேயர், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர்,சுசீந்திரம் அனுமன், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் என பல தலங்களில் அனுமன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.
செவ்வாய்க்கிழமை, புதன் கிழமை, சனிக்கிழமைகளில் அனுமனைத் தரிசிப்பதும் ஹனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், ஹனும மந்திரத்தை ஜபித்தும் வழிபடுவது காரியத்தடைகளையெல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.
ஹனும மந்திரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஹனுமதே ராமதூதாய
லங்காவித்வம் ஸனாய;
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
ஸாகினி டாகினி வித்வப் ஸனாய
கிலகிய பூபூ காரினே
விபீஷணாய ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம்ஹ்ரீம் ஹ்ரும்பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் அவசியம் சொல்லுங்கள். அனுமனைத் தரிசித்து வேண்டுங்கள். காரியத்தை வீரியமாக்கித் தந்தருளுவார். எடுத்த காரியத்தையெல்லாம் நிறைவேற்றித் தந்திடுவார் ராம பக்த அனுமன்!
இந்த மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லி வாருங்கள். அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி வேண்டிக்கொண்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதி ஒன்றிணைவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago