மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவதால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகும். அவை நிறைவேறவும் சந்தர்ப்பம் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். 2-ம் தேதி முதல் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் பழகுவது நல்லது. கூட்டாளிகளால் சங்கடம் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம், வெண்மை.
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: அஷ்டமச் சனிக்குப் பிரீதி செய்யவும். மாற்றுத் திறனாளிகள், ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
***
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் புதனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். மன மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். நண்பர்கள் உதவுவார்கள். தகவல் தொடர்புத் துறை லாபம் தரும். புதிய சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் வருவாய் கிடைத்துவரும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்லவர்களின் தொடர்பை வலுப்படுத்திக்கொள்வது நல்லது. தீய பழக்கவழக்கங்களுக்கு இடம் தர வேண்டாம். 2-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பெண்களால் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.
***
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் உலவுவது விசேஷம். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். சுக்கிரன் அனுகூலமாக உலவுவதால் பெண்களால் நலம் உண்டாகும். மனைவியால் சொத்துகளும் பொருட்களும் சேரும். முயற்சி வீண்போகாது. சுபச்செலவுகள் ஏற்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சனி பலம் இருப்பதால் உழைப்புக்கும் தகுதிக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். 3-ல் குருவும், 4-ல் ராகுவும் இருப்பதால் பொருள் கொடுக்கல்-வாங்களில் விழிப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள் : அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: ராகு, குருவுக்குப் பிரீதி செய்யவும்.
***
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 4-ல் புதனும் உலவுவது சிறப்பு. செய்துவரும் தொழிலில் வளர்ச்சி காண வழிபிறக்கும். படிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். பணப் புழக்கம் திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். சுபச்செலவுகள் ஏற்படும். இடமாற்றம், நிலைமாற்றம் நல்ல விதத்தில் அமையும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். ஏற்றுமதி-இறக்குமதி லாபம் தரும். வியாபாரம் சூடு பிடிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். கற்பனை வளம் பெருகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஆடவர்களுக்குப் பெண்களால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரியன், சனி, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
***
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் 3-ல் உலவுவது சிறப்பு. சுக்கிரன் அனுகூலமாக உலவுவதால் செய்துவரும் தொழில் விருத்தி அடையும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பெண்களின் எண்ணம் நிறைவேறும். கணவன்-மனைவி இடையே கருத்தொற்றுமை கூடும். பண வரவு அதிகமாகும். குரு ஜன்ம ராசியில் அமர்ந்து 5, 7, 9-ம் இடங்களைப் பார்ப்பதால் பிள்ளைகள் நலம் சீராகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். காடு, மலை, வனாந்திரங்களில் தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். 2-ல் ராகுவும் 8-ல் கேதுவும், 4-ல் சனியும் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். விநாயகரை வழிபடவும்
***
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி புதன் 2-ல் உலவுவது சிறப்பு. 3-ல் உள்ள சனியும், 12-ல் உலவும் சுக்கிரனும் நலம் புரிவார்கள். இதனால், செல்வாக்கும் மதிப்பும் உயரும். உழைப்புக்குரிய பயனைப் பெற்றுவருவீர்கள். பொது நலப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். தரகர்களுக்கு கமிஷன் உயரும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வெளிநாடு சென்று பயிலச் சிலருக்கு வாய்ப்பு கூடிவரும். தொழில் முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பொருள் வரவு சற்று கூடும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேது, குரு, செவ்வாய்க்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
12 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago