மார்கழி மாதத்தின் கடைசி சோம வாரம் இன்று. இந்த நன்னாளில், சிவ புராணம் பாராயணம் செய்தும் நமசிவாய மந்திரம் சொல்லியும் சிவனாரை தரிசிப்போம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அம்பாளையும் சிவபெருமானையும் தரிசித்து பிரார்த்திப்போம்.
மார்கழி மாதம் என்பது சிறப்பான மாதம். மார்கழி மாதம் என்பது பக்திக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் புதிதாக ஜபங்களையும் கலைகளையும் கற்றுக்கொள்ளும் மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகளிலும் பூஜைகளிலும் ஆத்மார்த்தமாக ஈடுபட்டால், இறைவனின் பேரருளைப் பெறலாம்.
’மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’ என்று மகாபாரதத்தில், பகவான் கிருஷ்ணர் தெரிவித்துள்ளார். மார்கழி மாதம் முழுவதும் சிவ வழிபாடு செய்வதும் பெருமாள் வழிபாடுகள் மேற்கொள்வதும் மும்மடங்குப் பலன்களைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மார்கழி மாதத்தில் திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை முதலானவற்றைப் பாராயணம் செய்தும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் ஆலயத்துக்கு செல்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள்.
» கூடாரவல்லியில் ஆண்டாளை கொண்டாடுவோம்!
» மனம் போல் மாங்கல்யம் தருவாள் ஆண்டாள்; கூடாரைவல்லியில் ஆண்டாள் வழிபாடு!
மார்கழி மாதத்தில்தான் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா எனும் வைபவமும் ஆருத்ரா தரிசனம் என்கிற திருவாதிரைப் பெருவிழாவும் நடைபெறும். மார்கழி மாதத்தில் வைஷ்ண திருத்தலங்களில் தினமும் காலையும் மாலையும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
அதேபோல், மார்கழி மாதத்தில் ஆண்டாளைக் கொண்டாடும் வகையில் கூடாரவல்லித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சிவன் கோயில், பெருமாள் கோயில் என்றில்லாமல், மார்கழி மாதம் முழுவதுமே எல்லா ஆலயங்களிலும் காலையும் மாலையும் விசேஷ வழிபாடுகளும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
மார்கழி மாதத்தில் சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமையில் சிவனாரை வழிபடுவதும் சிவ பூஜை மேற்கொள்வதும் சிறப்புக்கு உரியது. மார்கழி மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று. இந்தநாளில், மாலையில் சிவ தரிசனம் செய்யுங்கள். குளிர்ந்த வேளையில், சிவனாரை தரிசியுங்கள். நமசிவாய மந்திரம் சொல்லி மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் களைந்து அருளுவார் சிவனார். சிக்கல்கள் அனைத்தையும் தீர்த்தருளுவார்.
மனதில் நிம்மதியையும் அமைதியையும் தந்து ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளும் சிவனாரை வழிபடுவோம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago