வினைகள் தீர்த்தருள்வான் வேலவன் என்ற வாசகம் உண்டு. ‘யாமிருக்க பயமேன்’ என முருகப்பெருமானே அருளியுள்ளார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், முருகப்பெருமானின் தீவிர பக்தர். மனமுருக அவர் பாடிய குமாரஸ்தவம் கேட்டு முருகப்பெருமானே திருக்காட்சி தந்தருளினார் என்கிறார்கள் முருக பக்தர்கள்.
பாம்பன் சுவாமிகள் அருளிய குமார ஸ்தவம் பாராயணம் செய்து மனதார வேண்டிக்கொண்டால் போதும். தீராத நோயைத் தீர்த்துவைப்பார். வழக்கு முதலானவற்றில் வெற்றியைத் தந்தருள்வார். தொழிலில் வியாபாரத்தில் மேன்மையை ஏற்படுத்தி அருளுவார். வீடு மனை வாங்கும் யோகத்தைக் கொடுப்பார் வெற்றிவேலன்.
குமார ஸ்தவத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், சஷ்டி மற்றும் கிருத்திகை நட்சத்திர நாளிலும் சொல்லி வழிபடுங்கள். சகல யோகங்களும் தந்தருள்வார் சக்தி வடிவேலவன்.
ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ
ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோண பதயே நமோ நம ஹ
ஓம் ஷட்கோஷ பதயே நமோ நம ஹ
ஓம் நவநிதி பதயே நமோ நம ஹ
ஓம் சுபநிதி பதயே நமோ நம ஹ
ஓம் நரபதி பதயே நமோ நம ஹ
ஓம் ஸுரபதி பதயே நமோ நம ஹ
ஓம் நடச்சிவ பதயே நமோ நம ஹ
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம ஹ
ஓம் கவிராஜ பதயே நமோ நம ஹ
ஓம் தபராஜ பதயே நமோ நம ஹ
ஓம் இகபர பதயே நமோ நம ஹ
ஓம் புகழ்முனி பதயே நமோ நம ஹ
ஓம் ஜயஜய பதயே நமோ நம ஹ
ஓம் நயநய பதயே நமோ நம ஹ
ஓம் மஞ்சுள பதயே நமோ நம ஹ
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம ஹ
ஓம் வல்லீ பதயே நமோ நம ஹ
ஓம் மல்ல பதயே நமோ நம ஹ
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம ஹ
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் இஷ்டி பதயே நமோ நம ஹ
ஓம் அபேத பதயே நமோ நம ஹ
ஓம் ஸுபோத பதயே நமோ நம ஹ
ஓம் வியூஹ பதயே நமோ நம ஹ
ஓம் மயூர பதயே நமோ நம ஹ
ஓம் பூத பதயே நமோ நம ஹ
ஓம் வேத பதயே நமோ நம ஹ
ஓம் புராண பதயே நமோ நம ஹ
ஓம் ப்ராண பதயே நமோ நம ஹ
ஓம் பக்த பதயே நமோ நம ஹ
ஓம் முக்த பதயே நமோ நம ஹ
ஓம் அகார பதயே நமோ நம ஹ
ஓம் உகார பதயே நமோ நம ஹ
ஓம் மகார பதயே நமோ நம ஹ
ஓம் விகாச பதயே நமோ நம ஹ
ஓம் ஆதி பதயே நமோ நம ஹ
ஓம் பூதி பதயே நமோ நம ஹ
ஓம் அமார பதயே நமோ நம ஹ
ஓம் குமார பதயே நமோ நம ஹ.
ஸ்ரீகுமார ஸ்தவத்தை பாராயணம் செய்யும் போது, வீட்டில் விளக்கேற்றுங்கள். முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். வேண்டியதெல்லாம் தந்தருள்வார் முத்துக்குமரன்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 hour ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago