ஒவ்வொரு தெய்வமும் சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்தவையே. அந்தந்த தெய்வத்துக்கு என்று ஒவ்வொரு நாட்கள் மிக முக்கியமானதொரு நாட்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு வீட்டில் எந்த தெய்வங்களின் சாந்நித்தியம் நிறைந்திருந்தாலும் மிக முக்கியமானதொரு சக்தியாகவும் அந்த வீட்டை கோலோச்சுபவராகவும் வாஸ்து பகவான் திகழ்கிறார்.
வாஸ்து பகவான், வாஸ்து புருஷன் என்றெல்லாம் வாஸ்துவையும் வாஸ்து பகவானையும் விவரிக்கிறது சாஸ்திரம். வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் அமைந்திருக்கிறது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதேபோல், வீட்டுக்கு பூமி பூஜை, அஸ்திவாரம் எழுப்புதல், கட்டடம் கட்டுதல், நிலை வாசல் அமைத்தல், கிரகப் பிரவேசம் செய்தல், வீட்டில் பூஜைகளை மேற்கொள்ளுதல் என்று எதைச் செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வது போல், வாஸ்து நாளிலும் செய்யலாம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
2021ம் ஆண்டின் வாஸ்து நாட்களை அறிந்து அந்த நாளில் முறையே வாஸ்து பகவானை வழிபடுவதும் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை. இதுவரை இருந்த தரித்திரங்களையெல்லாம் போக்கியருளுவார் வாஸ்து பகவான்.
அதேபோல், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுப்பார். கவலைகள், திடீர் சண்டைகள், வீண் மனஸ்தாபங்கள் முதலானவற்றில் இருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் போக்கி, குடும்பத்தில் நிம்மதியையும் அமைதியையும் ஆனந்தத்தையும் செல்வத்தையும் வழங்கி அருளுவார் வாஸ்து பகவான்.
» மார்கழி சஷ்டியில் கந்தசஷ்டி கவசம்!
» 2021-ன் முதல் சங்கடஹர சதுர்த்தி; சனிக்கிழமையில் ஆனைமுக வழிபாடு!
2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி திங்கட்கிழமை காலை 10.41 முதல் 11.17 வரை வாஸ்து நாள். வாஸ்து நேரம். மார்ச் மாதத்தில் 6ம் தேதி சனிக்கிழமை காலை 10.32 முதல் 11.08 வரை வாஸ்து நாள், வாஸ்து நேரம்.
ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.54 முதல் 9.30 மணி வரை வாஸ்து நாள் மற்றும் வாஸ்து நேரம். ஜூன் மாதத்தில் 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.58 முதல் 10.34 மணி வரை வாஸ்து நாளாகவும் வாஸ்து நேரமாகவும் குறிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் 27ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.44 முதல் 8.20 மணி வரை வாஸ்து நாள், வாஸ்து நேரம். ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.23 முதல் 7.59 மணி வரை வாஸ்து நாளாகவும் வாஸ்து நேரமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் 28ம் தேதி வியாழக்கிழமை காலை 7.44 முதல் 8.20 மணி வரை வாஸ்து நாள், வாஸ்து நேரம். நவம்பர் மாதத்தில் 24ம் தேதி புதன் கிழமை காலை 11.29 முதல் 12.05 மணி வரை வாஸ்து நாளாகவும் வாஸ்து நேரமாகவும் சொல்லிவைத்திருக்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள்.
இந்த வாஸ்து நாட்களில், இல்லத்தை சுத்தமாக்கி வீடு முழுக்க தீப தூப ஆராதனைகள் செய்து, சர்க்கரைப் பொங்கல், கேசரி முதலான இனிப்பு வகைகளை நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். வாஸ்து நேரத்தில் வீட்டிலும் வாசலிலும் விளக்கேற்றி வழிபடுங்கள். இல்லத்தில் சுபிட்சத்தையும் ஐஸ்வரியத்தையும் குடிகொள்ளச் செய்வார் வாஸ்து பகவான்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
6 hours ago
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago