மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும் 6-ல் புதன், ராகு ஆகியோரும் உலவுவதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். பண நடமாட்டம் திருப்திகரமாக இருந்துவரும். மக்களாலும், உற்றார், உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். புதிய சிந்தனைகள் மனதில் உருவாகும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்திலும் உறவினர்களையும் பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பதற்றத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம், வெண்மை.
எண்கள்: 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரியன், சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
***
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 5-ல் புதனும் 6-ல் சூரியனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். புதிய முயற்சிகள் கைகூடும். சொத்துகள் மற்றும் நிலங்கள் சேரும். நண்பர்கள் உதவிபுரிவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். தகவல் தொடர்புத் துறையில் ஆக்கம் உண்டு. வியாபாரிகளுக்கும் கணிதத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னேற்றம் நிலவும். அரசியல், நிர்வாகத் துறையினர் வரவேற்பு பெறுவார்கள். கலைஞர்களது நிலை உயரும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வாரக் கடைசியில் இடமாற்றம் உண்டாகும். எதிர்பாராத சுபச்செலவுகள் ஏற்படும். கண், இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். கெட்ட பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
***
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் புதன் 4-ல் உலவுவது சிறப்பாகும். செவ்வாய், சுக்கிரன், சனி, கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் அறிவாற்றலும் செயல்திறமையும் வெளிப்படும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். புதிய நிலம், மனை, வீடு, வாகனம் வாங்கச் சந்தர்ப்பம் கூடிவரும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். உழைப்பு வீண்போகாது. தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். தொழில் ரீதியாக ஒரு மாற்றம் உண்டாகும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். குடும்ப நலம் சீராகும். மூத்தோர் ஆசிகளைப் பெறுவீர்கள். 26-ம் தேதி முதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள் : அக்டோபர் 23, 25.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: ராகுவுக்கும் குருவுக்கும் பிரீதி செய்து கொள்ளவும். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது.
***
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் 3-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பொருளாதார நிலை உயரும். கூட்டாளிகளாலும் நண்பர்களாலும் அனுகூலம் ஏற்படும். பயணத்தால் நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். தொழில் விருத்தி அடையும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு வரும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். 26-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு வெளிச்சமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
அக்டோபர் 22 (பகல்), 25.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு,
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: சூரியன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
***
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் 3-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாகவே உள்ளது. செவ்வாயும் குருவும் ஜன்ம ராசியில் இருந்தாலும் நலம் புரிவார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். எதிர்ப்பு அடங்கும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். கூட்டாளிகள் உதவுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரம் பெருகும். அலைச்சல் அதிகமாகும். உழைப்பும் அதிகரிக்கும். தாய் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தாய் வழி உறவினர்களாலும் தொல்லைகள் சூழும். 26-ம் தேதி முதல் வியபாரத்தில் விழிப்புணர்ச்சி தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23.
திசைகள்: தென்கிழக்கு,வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, பச்சை.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: சனி, ராகு, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. துர்க்கை, விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.
***
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி புதன் வலுத்திருக்கிறார். சுக்கிரன், சனி ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பெண் குழந்தைகளாலும், பெண்களாலும் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகுத் துறைகள் ஆக்கம் தரும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் உண்டாகும். தொழிலாளர்களது நிலை உயரும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். கொடுக்கல் வாங்கலில் விழிப்பு தேவை. பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பேசிப் பழகி வருவது நல்லது. பதற்றம் கூடாது. 26-ம் தேதி முதல் பணவரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 22, 23, 25.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: ராகு, கேது, செவ்வாய்க்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago