சனிப்பெயர்ச்சி நாளில், பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். நம் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும்.நவக்கிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வர பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். தொழிலும் உத்தியோகத்திலும் ஏற்றம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில், சிவபெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றும் அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளைக் கண்ணார தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வார்கள்.
அதேபோல், மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திரமும் சிவ வழிபாட்டுக்கு உகந்தநாள். சிவனாரை பூஜிப்பதற்கு உரிய நாள். திருவாதிரை நட்சத்திரம் சிவனாரின் நட்சத்திரம். எனவே, திருவாதிரையில் விரதம் மேற்கொண்டு சிவ வழிபாடு செய்யும் பக்தர்களும் இருக்கிறார்கள். சிவாலயங்களுக்குச் சென்று நந்திதேவரையும் சிவலிங்கத் திருமேனியையும் தரிசிப்பார்கள்.
மாதந்தோறும் அமாவாசைக்கு முந்தைய மூன்றாம் நாள் திரயோதசி திதி வரும். பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாள் திரயோதசி வரும். இந்த திரயோதசி என்பது பிரதோஷம் எனப்படும் பூஜைக்கு உரிய மிக முக்கியமான நாள்.
» மகரம், கும்பம், மீனம் ; வார ராசிபலன்கள்; டிசம்பர் 24 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை
» மேஷம், ரிஷபம், மிதுனம்; வார ராசிபலன்கள்; டிசம்பர் 24 முதல் டிசம்பர் 30ம் தேதி வரை
பிரதோஷம் சிவ வழிபாட்டில் மிக மிக முக்கியமான பூஜை. மிக முக்கியமான நாள். இந்தநாளில், நந்திதேவருக்கு குளிரக்குளிர அபிஷேகங்கள் நடைபெறும். அதேபோல சிவபெருமானுக்கு அதாவது சிவலிங்கத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான காலம். ஆகவே எல்லா சிவாலயங்களிலும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில், சிவாலயத்தில் பிரதோஷ அபிஷேகம் பூஜை ஆராதனைகள் நடைபெறும்.
நந்திதேவருக்கு அருகம்புல் மாலை சார்த்துங்கள். சிவனாருக்கு வில்வம் சார்த்துங்கள். மாலையில் நடைபெறும் பிரதோஷ பூஜையை மறக்காமல் சிவாலயம் சென்று சிவ தரிசனம் செய்யுங்கள். இன்று 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம். மேலும் இன்றைய நாளில் சனிப்பெயர்ச்சியும் நடந்துள்ளது. சனிப்பெயர்ச்சி நடந்திருக்கும் இந்த ஞாயிற்றுக்கிழமையில், சிவாலயம் சென்று பிரதோஷ பூஜையை கண்ணார தரிசியுங்கள். நவக்கிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வர பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கவலைகள் எல்லாம் அகலும். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
28 mins ago
ஆன்மிகம்
56 mins ago
ஆன்மிகம்
57 mins ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago