கும்ப ராசி வாசகர்களே
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், அழுதாலும் உதட்டால் புன்னகைக்கும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென்று வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். இதுவரை, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல பரிசு, பாராட்டுகளைப் பெற்றுத் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான சனிபகவான் ஆட்சிபெற்று ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுப் போன காரியங்கள் இனி விரைந்து முடியும்.
ஆனாலும் காசை வாரி இறைத்து கண்டபடி செலவு செய்தீர்களே! அந்தப் போக்கை இனி மாற்றிக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனத்தில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும் தந்தாரே! எதிலும் ஈடுபாடற்ற நிலை, நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி, நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள்.
உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் உதாசீனப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு ஜென்மச் சனியாக அமர்வதால் இக்காலகட்டத்தில் வீண் விரயம், விரக்தி, ஏமாற்றம், காரியத் தடை வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சனிபகவான் உங்களின் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழிவகை பிறக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். சனிபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
சனிபகவானின் நட்சத்திர பலன்கள்
உத்திராடம் நட்சத்திரத்துக்கு 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். மாமியார், நாத்தனாரின் ஆதரவு பெருகும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். கணவர்வழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்துக்குச் செல்வதால் அக்காலகட்டத்தில் தந்தையாருடன் கருத்துமோதல்கள் வரும். அவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் அடிவயிற்றில்வலி, ஒவ்வாமை, சளித் தொந்தரவு மற்றும் கடன் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை வக்கிரத்தில் செல்வதால் பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி, திடீர் பணவரவு உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள், தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள்.
இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலக்கட்டத்தில் சனிபகவான் வக்கிரமடைவதால் அலைச்சல் அதிகரிக்கும். தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். மருந்து, கமிஷன், மரவகை களால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்கு தாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.
உத்தியோகத்தில் சூழச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதி காரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். சக ஊழியர் களால் மறைமுகப் பிரச்சி னைகள் வந்து நீங்கும். பதவியுயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடிப் பெறுவீர்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு. இந்தச் சனி மாற்றம் எதார்த்தமான முடிவுக ளால் முன்னேற்றத்தையும், விட்டுக்கொடுக்கும் போக்கால் வெற்றியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
ஆரணி - படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் எந்திர சனீஸ்வர பகவானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago