கன்னி ராசி வாசகர்களே
கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிட மும் சமமாக பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்தி செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனசு கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்து நாலாவிதத்திலும் உங்களைச் சின்னாபின்னமாக்கிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் ஐந்தாம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும்.
சனிபகவான் ஆட்சிப் பெற்றிருப்பதால் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும். சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க விடாமல் சனிபகவான் அலைக்கழித்தாரே! அடிக்கடி வீடு மாறிக் கொண்டிருந்தீர்களே! முக்கியமான இடத்திற்கு புறப்படும் போதெல்லாம் வாகனம் பழுதானதே! தாயார் உடல் நிலை பாதித்ததே! இனி அந்த நிலை மாறும்.
ஐந்தாம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வயிற்று வலி, இடுப்பு கழுத்து வலியால் சிரமப்பட்டீர்களே! இனி வலி நீங்கி வலிமைக் கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு, வி.ஐ.பிகளுடன் நட்பு, வாகன யோகம் உண்டாகும். சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் இடம்பொருள் அறிந்து பேசுவது நல்லது.
சனிபகவானின் நட்சத்திர பலன்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் காரியத்தடையும், அலைச்சலும் இருக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களின் உடல்நலம் பாதிக்கும். குடும்பத்திலும் பிரச்சினைகள் வந்து போகும்.
இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் வசதி வாய்ப்புகள் பெருகும். வாழ்வின் முன்னேற்றத்துக்குக் காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். ஆனால் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண்பழி, விபத்து, இழப்பு, உடல் நலக்குறைகள் வந்து போகும். 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள்.
அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நெருங்கிய உறவினர், நண்பர்களின் இழப்பைச் சந்திக்க நேரிடும். பூர்விகச் சொத்துப் பிரச்சினைகள் வரும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்கிரமடைவதால் பழைய பிரச்சினைகள் தீரும்.
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய சரக்குகள் விற்கும். ஏற்றுமதி இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இந்தச் சனிப்பெயர்ச்சி உங்கள் நட்பு வட்டத்தை விரிவுப்படுத்துவதுடன் எதிலும் விவேகமாக செயல்பட்டு சாதிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்
பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். உயர்கல்விக்குக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவ மாணவியரின் படிப்புக்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago