சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: சிம்ம ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

By ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

சிம்ம ராசி வாசகர்களே

போற்றுதலுக்கும், தூற்றுதலுக்கும் அஞ்சாத நீங்கள், யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாதவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பல வகைகளிலும் மனஉளைச்சல்களையும், நிம்மதியின்மையையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் ஆறாம் வீட்டில் அமர்வதால் விபரீத ராஜயோகம் உண்டாகும்.

எப்போது பார்த்தாலும் ஒரு மன இறுக்கத்துடன் காணப்பட்டீர்களே! சாதாரண விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டீர்களே! சில நேரங்களில் சிறு பிள்ளைத்தனமாகப் பேசி நல்ல நட்பை இழந்தீர்களே! இனி பக்குவமாகப் பேசி பல காரியங்களையும் கச்சிதமாக முடிப்பீர்கள். எதையோ இழந்ததைப் போல் களையிழந்திருந்த உங்கள் முகம் இனி தெளிவடையும். உடம்பு தூங்கினாலும், மூளை தூங்காமல் இருந்ததே! இனி முழுத்தூக்கம் வரும்.

சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அறுசை சிகிச்சை, கருத்து மோதல்களும் வந்துச் செல்லும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்யுங்கள்.

சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கூடும். ஆனால் கூடாப் பழக்கம் உள்ளவர்களை தவிர்க்கப் பாருங்கள். சனிபகவான் எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வாகனங்களை இயக்கும் போது அலைபேசியில் பேச வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்ல வேண்டாம். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்று நினைத்திருந்த பணமும் கைக்கு வரும்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் நெஞ்சுவலி, முதுகுத் தண்டில் வலி வரக்கூடும். மற்றவர்களை நம்பிப் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் என வீடு களை கட்டும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்துக்குச் செல்வதால் பணத்தட்டுபாடு, ஏமாற்றம், துரோகங்களைச் சந்திக்க நேரிடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனி பகவான் செல்வதால் திடீர் யோகங்கள், சொத்துச் சேர்க்கை உண்டு. இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனி பகவான் வக்ரத்துக்குச் செல்வதால் புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி களைகட்டும். வியாபாரத்தில் அதிரடி லாபம் கிடைக்கும். பலமுறை கேட்டும் வராமலிருந்த பாக்கித் தொகை வசூலாகும். சந்தை நிலவரம் தெரியாமல் சரக்குகளை வாங்கிப் போட்டு சங்கடப்பட்டீர்களே! இனி மக்கள் ரசனைக்கேற்ப மாறுவீர்கள்.

தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புகழ்பெற்ற நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். இந்த சனிப் பெயர்ச்சி முதல் தரமான ராஜயோகத்தை தருவதுடன், எங்கும் எதிலும் வெற்றி வாகைசூட வைக்கும்.

பரிகாரம்

தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் பிரகதீஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோருக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். மென்மேலும் முன்னேறுவீர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்