சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: கடக ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை)

By ஜோதிபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கடக ராசி வாசகர்களே

தொலைநோக்குச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர்கள். தானுண்டு தன் வேலை யுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்க வைக்கும் செயல்திறன் கொண்டவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தி சமூக அந்தஸ்தையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் ஏழாம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்.

சனிபகவான் ஏழாமிடத்தில் அமர்வதால் கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்கியம் பாதிக்கும். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்வதால் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து போன்ற சங்கடங்கள் ஏற்படும்.

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கி புது நிறுவங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளைப் பயன்படுத்தி உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுற்றலும் வந்து நீங்கும். சனிபகவான் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, அவ்வப்போது குடிநீர், கழிவுநீர்ப் பிரச்சினைகள் வந்துபோகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். சனிபகவான் உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் கையிருப்புகள் கரையும்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பிரபலங்கள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சொத்துப் பிரச்சினைகள் தீரும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் பணத்தட்டுப்பாடு, வீண்பகை, அரசு விஷயங்களில் இழுபறி நிலை உண்டாகும்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, அரசு மரியாதை, வீடு, மனை வாங்குதல் உண்டு. இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் ஏமாற்றங்கள், இழப்புகள், மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள்.

வியாபாரத்தில் அதிகம் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். ஊழியர்களிடம் வியாபார ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலியுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். கமிஷன், மருந்து வகைகளால் லாபம் வரும். சிலருக்குப் பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். இந்த சனி மாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன் உங்களைப் புதிய பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்

திருநள்ளாறில் வீற்றிருக்கும் சனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழுநோய், காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

18 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்