மிதுன ராசி வாசகர்களே
எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனையும் அதிகம் உள்ளவர்கள். நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களைத் துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களைக் கை தூக்கி விடுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து அவ்வப்போது உடல் நலக்குறைவும், தடைகளையும் தந்தாலும் ஓரளவு யோக பலன்களையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் எட்டாம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து இனி பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் பிரச்சினையை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்கச் சிலர் முயற்சி செய்வார்கள். வரவேண்டிய பூர்விகச் சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். வீட்டு விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள்.
சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் தன்னம்பிக்கை பிறக்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் சாதுரியமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிச் சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். சனிபகவான் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.
சனிபகவானின் நட்சத்திர பலன்கள்
உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் இக்காலகட்டத்தில் இளைய சகோதரர் வகையில் மனத்தாங்கல், வீண் செலவுகள் வந்து நீங்கும்.
திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் பங்குவர்த்தகம் மூலம் பணம் வரும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் சோர்வு, களைப்பு வந்து நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் நிலம் வாங்கும் யோகம் உண்டு. என்றாலும் ரத்த சோகை வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்கிரமடைவதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.
வியாபாரம் சுமார்தான். போட்டிகள் அதிகரிக்கும். ஆழம் தெரியாமல் காலைவிடாதீர்கள். பெரிய முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும்.
இந்தச் சனி மாற்றம் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் ஒருபக்கம் தந்தாலும் சகிப்புத் தன்மையால் வெற்றிகளையும் தருவதாக அமையும்.
பரிகாரம்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் பஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago