வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் என்றழைக்கப்படும் கோயிலை, வாசனை திரவியங்களால் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசி, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி, ஆணிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம் என இந்த 4 முக்கிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை அன்று கோயில் முழுவதும் வாசனை திரவியத்தால் சுத்தம் செய்வது ஐதீகம். காலம் காலமாக வரும் இந்த வழக்கம், இன்றும் தொடர்கிறது.
வரும் 25-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி, இன்று (டிச. 22) காலை கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. காலை முதலே கோயிலில் உள்ள கற்பகிரகம், பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம் உட்பட அனைத்து உப சன்னதிகளையும் பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், பச்சை கற்பூரம் போன்றவற்றால் சுத்தம் செய்தனர். சுமார் 5 மணி நேரம் வரை ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்றது. அதன் பின்னரே மதியம் 12 மணிக்குப் பிறகு பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதித்தனர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
3 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago