வார ராசிபலன் 15-10-2015 முதல் 21-10-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் சுக்கிரனும் 6-ல் சூரியன், புதன், ராகுவும் உலவுவதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். அரசியல், நிர்வாகம், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளில் வளர்ச்சி காணலாம். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். 8-ல் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலும் அதிகமாகும்.

நிலபுலங்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. தாய் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவரின் குடும்பத்தாரால் மனச் சலனம் உண்டாகும். 18-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறி, பலம் குறைவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 15, 18 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம், வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9. ‎

பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது அவசியம்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 5-ல் புதனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் விலகும் நேரமிது. செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் அளவோடு அனுகூலம் உண்டாகும்.

ஆன்மிகப்பணியாளர்கள், ஜோதிடர்கள், அறப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்கும். வாரப் பின்பகுதியில் உடன்பிறந்தவர்களால் சிறு சங்கடம் ஏற்படும். 18-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். 4-ல் குருவும், செவ்வாயும் இருப்பதால் மார்பு, இதயம், வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொத்துகள் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 15, 16.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 7.

பரிகாரம்: துர்கையம்மனுக்கு நெய் விளக்கேற்றி, குங்கும அர்ச்சனை செய்வது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் புதன் வலுத்திருக்கிறார். செவ்வாய், சுக்கிரன் 3-லும், சனி 6-லும் உலவுவது விசேஷம். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பிள்ளைகளால் அளவோடு அனுகூலம் ஏற்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜென்ஸி தொழில்கள் லாபம் தரும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

தொழிலாளர்கள், இயந்திரப்பணியாளர்கள், விவசாயிகள் நிலை உயரப் பெறுவார்கள். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். சூரியன், குரு, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். சொத்துகளை வாங்கும்போதும் விற்கும்போதும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மக்கள் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள் : அக்டோபர் 15, 16, 18 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை, மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: சூரியன், ராகு, குருவுக்குப் பிரீதி செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். துர்கையைத் தொடர்ந்து வழிபடவும்.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் ராகுவும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும்.

எதிரிகள் அடங்குவார்கள். பயணம் பயன்படும். புதியவர்கள் அறிமுகமாகி நலம் புரிவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். 18-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. தந்தை நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 15, 16, 18 (பிற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 1, 3, 4, 6, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் உலவுவது சிறப்பு. குருவும் செவ்வாயும் ஜன்ம ராசியில் இருந்தாலும் ஓரளவு நலம் உண்டாகும். குருவின் பார்வை 5, 7, 9-ம் இடங்களுக்குப் பதிவதும் சிறப்பு. இதனால் உங்கள் மதிப்பு உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். தொழில் ரீதியாக வளர்ச்சி காண்பீர்கள். மேலதிகாரிகள் புகழுவார்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறை ஆக்கம் தரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாலததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும்.

2-ல் சூரியனும் ராகுவும் 4-ல் சனியும் இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். அந்நியரால் பிரச்சினைகள் சூழும். தாயாராலும் தாய் வழி உறவினர்களாலும் சங்கடங்கள் ஏற்படும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். 18-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 15, 16, 18 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வான்நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, 6.

பரிகாரம்: சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. ராசிநாதன் புதன் ஜென்ம ராசியில் இருப்பதும் அனுகூலமாகும். பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. 18-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்ப நலனில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வீண்வம்பு வேண்டாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 15, 16, 18 (பிற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.

எண்கள்: 5, 6, 8.

பரிகாரம்: குரு, செவ்வாய், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும். பிறரிடம் சுமுகமாகப் பழகவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்