ஏகாதசியில் விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி மகாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யுங்கள். மங்கல காரியங்கள் நடந்தேறும். சகல ஐஸ்வரியங்களையும் தந்தருள்வார்; இல்லத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்ய அருளுவார் திருமால்.
ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதி வருவது உண்டு. வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என இரண்டு ஏகாதசிகள் உண்டு. ஏகாதசி என்பது மகாவிஷ்ணுவுக்கு உரிய நாள்.
ஏகாதசி நாளில் விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் உண்டு. ஏகாதசி அன்று பெருமாளை வீட்டிலோ ஆலயம் சென்றோ வழிபடுகிற பக்தர்களும் இருக்கிறார்கள். ஏகாதசி திதி நாளில், பெருமாளை வணங்கி, கோவிந்தனின் திருநாமங்களைச் சொல்லி துளசி தீர்த்தம் பருகினாலே மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம்.
கார்த்திகையின் ஏகாதசி இன்று (10.11.2020). குரு வார ஏகாதசி. இதையடுத்து மார்கழி வந்துவிடும். மார்கழி மாதத்து ஏகாதசி, பெரிய ஏகாதசி. அதுதான் வைகுண்ட ஏகாதசி. அன்றைக்குத்தான் பரமபத வாசல் திறப்பு, வைகுண்ட வாசனின் சிலிர்க்க வைக்கிற தரிசனம் முதலானவை நடைபெறும்.
ஏகாதசியிலும் துவாதசியிலுமாக விரதம் மேற்கொள்வார்கள். இந்தநாளில் உணவே எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களும் உண்டு. மகாவிஷ்ணுவின் திவ்விய நாமங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து கொள்வார்கள்.
அடுத்த வருடம், வருகிற 2021ம் வருடத்தின் ஏகாதசிகளை அறிந்து குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஜனவரி 9ம் தேதி ஏகாதசி. இதை சப்லா ஏகாதசி என்பார்கள்.
ஜனவரி 24ம் தேதி வரும் ஏகாதசி. இதை பவுஷா புத்ராடா ஏகாதசி என்பார்கள்.
பிப்ரவரி 7ம் தேதி வரும் ஏகாதசி சட்டில ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
பிப்ரவரி 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வரும் ஏகாதசி ஜெய ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
மார்ச் 9ம் தேதி செவ்வாய்க்கிழமை வரும் ஏகாதசி விஜய ஏகாதசி என்றும் மார்ச் 25ம் தேதி வியாழக்கிழமை வரும் ஏகாதசி ஆமாலக்கி ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் 7ம் தேதி புதன்கிழமை வரும் ஏகாதசி பாப்மச்னி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 23ம் தேதி வெள்ளிக்கிழமை வரும் ஏகாதசியை கமாடா ஏகாதசி என்று போற்றப்படுகிறது.
மே மாதம் 7ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிற ஏகாதசியை வருதிணி ஏகாதசி என்றும் மே மாதம் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிற ஏகாதசியை மோகினி ஏகாதசி என்றும் விரதம் அனுஷ்டிப்பார்கள் பக்தர்கள்.
ஜூன் மாதம் ஞாயிற்றுக்கிழமை 6ம் தேதி அன்று வரும் ஏகாதசி, அபரா ஏகாதசி என்றும் ஜூன் மாதம் திங்கட்கிழமை 21ம் தேதி அன்று வருகிற ஏகாதசி என்றும் நிர்ஜலா ஏகாதசி என்றும் கொண்டாடப்படுகிறது.
ஜூலை மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை வருகிற ஏகாதசி யோகினி ஏகாதசி, ஜூலை மாதம் 20ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி தேவ் ஷாயானி ஏகாதசி, ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி புதன்கிழமை அன்று வருகிற ஏகாதசி கமிகா ஏகாதசி, ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை 18ம் தேதி வருகிற ஏகாதசி சரவண புத்ரத ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் 3ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிற ஏகாதசி அஜா ஏகாதசி, செப்டம்பர் மாதம் வெள்ளிக்கிழமை 17ம் தேதி வருகிற ஏகாதசி பார்சவ ஏகாதசி, அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை வருகிற ஏகாதசி இந்திர ஏகாதசி என்றும் அக்டோபர் 16ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிற ஏகாதசி பாபன்குஷா ஏகாதசி என்றும் அனுஷ்டிக்கப்படுகிறது.
நவம்பர் 1ம் தேதி திங்கட்கிழமை வருகிற ஏகாதசி ராம ஏகாதசி என்றும் நவம்பர் 14ம் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிற ஏகாதசி தேவதான ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது. நவம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி உட்பனா ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.
டிசம்பர் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற ஏகாதசி மோக்ஷா ஏகாதசி என்றும் டிசம்பர் 30ம் தேதி வியாழக்கிழமை வருகிற ஏகாதசி சப்லா ஏகாதசி என்றும் போற்றி அனுஷ்டிக்கப்படுகிறது.
ஏகாதசி நாளில்... அரங்கனை, அனந்தனை, நம் ஆயுளெல்லாம் காத்தருளும் ஏழுமலையானை, திருவரங்கனை, குணசீலனை... ஒப்பற்ற பெருமாளை வணங்குவோம். சகல செளபாக்கியங்களும் ஐஸ்வரியங்களும் தந்தருள்வான் வேங்கடவன்.
ஏகாதசி நாளில், மாலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். ஒலிக்கவிட்டுக் கேட்போம். சங்கடங்களையெல்லாம் போக்கி அருளுவார் மகாவிஷ்ணு.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
19 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
10 days ago