குருப்பெயர்ச்சியையொட்டி, பட்டமங்கலத்தில் அருளும் குரு பகவானை மனதார வேண்டுவோம். மங்கல காரியங்களை நடத்தி அருளுவார். மங்காத செல்வத்தைத் தந்தருளுவார் குரு பகவான்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ளது பட்டமங்கலம். அற்புதமான சிவ ஸ்தலம். அருமையான குரு பரிகார திருத்தலம். இந்தத் தலத்தில் சுமார் 2 ஆயிரம் பழைமை மிக்க ஆலமரம் ஒன்று உள்ளது. இந்த ஆலமரம் மகத்துவம் வாய்ந்தது. மகிமை மிக்கது.
அருகிலுள்ள அட்டமாசித்தி தீர்த்தத்தில் நீராடி ஆலமரத்தை வலம் வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமணத்தடை, புத்திரபாக்கியத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது.
இந்தத் தலத்தின் இறைவன் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர். அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் குருவாக இருந்து வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கி அருளுகிறார்.
கல்யாணத் தடை தீர்க்கும் அற்புதத் தலம். குழந்தை பாக்கியம் தந்தருளும் திருத்தலம். குரு பகவானை இங்கு வந்து வேண்டிக்கொண்டால், குருவருளும் திருவருளும் கிடைக்கப் பெறலாம்.
ஆலமரத்தில் பிரார்த்தனையை கட்டி வேண்டிக்கொள்கிறார்கள் பக்தர்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் சிவாலயம், பட்டமங்கலம் குரு ஸ்தலம், திருக்கோஷ்டியூர் செளம்ய நாராயண பெருமாள், நாட்டரசன்கோட்டை கண்ணாத்தாள் கோயில் என அருகில் பல ஆலயங்களையும் தரிசிக்கலாம்.
கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த ஸ்ரீதட்சிணா மூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கும் பட்டமங்கலத்துக்கு வாருங்கள்.
குருப்பெயர்ச்சியையொட்டி சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் குரு பகவானை தரிசியுங்கள். பட்ட துன்பமெல்லாம் பறந்தோடச் செய்வார் குரு பகவான்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago