தேய்பிறை அஷ்டமியில் பைரவ வழிபாடு செய்வோம். பைரவரை பயமொன்றுமில்லை என்று வாழ்வோம். இன்று 8ம் தேய்பிறை அஷ்டமி.
எந்தவொரு காரியத்தையும் அஷ்டமியில் நவமியில் செய்யாமல் தவிர்த்துவிடச் சொல்லுவார்கள். ’இன்னிக்கி அஷ்டமியா இருக்கு. அதனால இந்தக் காரியத்தைச் செய்யல’ என்று சொல்லுவோம். சொல்லுவதையும் பார்த்திருப்போம். ’நாளைக்கி அஷ்டமி. அதனால வேலைக்குச் சேரவேணாம். அப்புறமா நல்லநாள் பார்த்து சேரு’ என்று மற்றவர்களுக்கும் எடுத்துரைப்பார்கள்.
ஆனால், அஷ்டமியில் பலரும் செய்தே ஆகவேண்டும் என்று நினைப்பதும் செயல்படுவதும் என்ன தெரியுமா? பைரவ வழிபாடு. அஷ்டமியில் எந்தக் காரியத்தையும் தவிர்ப்பவர்கள் கூட, பைரவரை வணங்குவதை தவறாமல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அஷ்டமி என்பது பைரவருக்கு உகந்தநாள். பைரவரை வழிபடுவதற்கு உரிய அற்புதமான நாள். பைரவரை தரிசித்துப் பிரார்த்தனை செய்வதற்கான நாள். பெளர்ணமிக்கு அடுத்து வரும் நாள் பிரதமையில் இருந்து தொடங்கும். இந்த பிரதமையில் இருந்து அமாவாசை வரையிலான நாட்கள் தேய்பிறை காலம் எனப்படும். பிரதமையில் இருந்து வருகிற எட்டாம் நாள் அஷ்டமி எனப்படுகிறது. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி என்பதும் பைரவருக்கான நாள். பைரவரை வழிபடுவதற்கான நாள்.
தேய்பிறை அஷ்டமியில், பைரவ தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் மிகுந்த பலன்களைத் தரக்கூடியது. எல்லா சிவாலயங்களிலும் பைரவருக்கு சந்நிதி உள்ளது. எல்லா சிவாலயங்களிலும் தேய்பிறை அஷ்டமியில், பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.
பைரவருக்கு உகந்தது செந்நிற மலர்கள். செவ்வரளி முதலான மாலைகள் சார்த்தி பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்வது ரொம்பவே விசேஷம்.
பைரவரின் வாகனம் நாய் என்கிறது புராணம். எனவே தெருநாய்களுக்கு உணவளிப்பதால் பைரவருக்கு அருள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று 8ம் தேதி தேய்பிறை அஷ்டமி. இந்தநாளில் பைரவரை வணங்குங்கள். உங்கள் பிரார்த்தனைகளை பைரவரிடம் முறையிடுங்கள். தெருநாய்களுக்கு உணவளியுங்கள். வாழ்வின் தடைகளைத் தகர்த்து அருளுவார். வேதனைகள் அனைத்தையும் போக்கி அருளுவார் பைரவர்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
10 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago