நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள். கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.
அஷ்டலட்சுமிகளும் வள்ளலென நமக்கெல்லாம் வரங்களை வாரி வழங்கும் கருணையுள்ளம் கொண்ட தெய்வங்கள். எட்டு தெய்வங்களும் எட்டு லட்சுமியரும் சேர்ந்தவர்கள்தான் அஷ்ட லட்சுமி என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களில்... இந்த எட்டு லட்சுமியரில் சந்தான லட்சுமியும் ஒருவர்.
பெண் தெய்வ வழிபாடு, நம் வாழ்வில் மிக மிக முக்கியமானது. பெண் தெய்வங்கள் எல்லோருமே சக்தியின் வடிவங்கள். சக்தி என்றுதான் கொண்டாடப்படுகிறார்கள்.
மகாவிஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி, மக்களுக்கு வரங்களைத் தருவதற்காகவே, நல்லனவற்றையெல்லாம் வழங்குவதற்காகவே படைக்கப்பட்டவள்.
ஒவ்வொரு ரூபமாகவும் ஒவ்வொரு குணங்களுடனும் ஒவ்வொரு திருநாமங்களுடனும் காட்சி தந்து அருள் வழங்குகிறாள். அவர்களில் சந்தானலட்சுமி தனித்துவம் மிக்கவளாகத் திகழ்கிறாள்.
சந்தானம் என்றால் குழந்தை என்று அர்த்தம். சந்தானம் எனப்படும் குழந்தை பாக்கியம் தந்தருளும் லட்சுமியாக சந்தானலட்சுமியாத் திகழ்கிறாள்.
மேலும் நம் சந்ததி வளரவும் செழிக்கவும் சகல ஐஸ்வரியங்களுடன் பரம்பரை பரம்பரையாக வாழவும் வழிவகைகள் செய்து அருளுகிறாள் அன்னை சந்தானலட்சுமி.
ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம் :
ஜடாமகுட சம்யுக்தாம்
ஸ்த்தி தாசந சமந்விதாம்
அபயம் கடகஞ் சைவ பூர்ணகும்பம்
புஜத்வயே கஞ்சுகம் ச்சந்த
வீரஞ்ச மெளக்திகம்
சாபிதாரீணீம் தீபசாமர நாரீபி:
சேவிதாம் பார்ச்வ யோர்த்வயோ
பாலே சேநாநி சங்காசே கருணாபூரி
தாநநாம் மஹாராஞ் ஞீஞ்ச
சந்தான லக்ஷ்மீம் இஷ்டார்த்த ஸித்தயே
இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வாருங்கள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் பெளர்ணமி முதலான நாட்களில் அவசியம் சொல்லி வாருங்கள். கேசரி அல்லது ஏதேனும் இனிப்பு நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு வழங்குங்கள்.
நம் வாழ்வில் செல்வத்தில் சிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றிக் கொடுப்பாள். கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வேண்டிக் கொண்டு நமஸ்கரித்து பிரார்த்தனை செய்யுங்கள். சந்தான பாக்கியத்தை தடையின்றித் தருவாள். ஜாதகத்தில் உள்ள புத்திரதோஷம் நீங்கும். சகல செல்வங்களையும் தந்து சந்தான லட்சுமி அருள்புரிவாள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago