ராஜயோகம் தருவாள் ஸ்ரீகஜலட்சுமி! 

By வி. ராம்ஜி

ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!

அஷ்டலக்ஷ்மிகளில் கஜலட்சுமியும் ஒரு தேவியாகக் கொண்டாடப்படுகிறாள். பாற்கடலில் இருந்து வெளிப்பட்டவர் என கஜலட்சுமியை வர்ணிக்கிறது புராணம். அப்படி, லக்ஷ்மியானவள் பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட போது, அவருடைய இரண்டு தோள்களுக்கு அருகில் இரண்டு யானைகள் வந்தன. சக்தி மிக்க லக்ஷ்மியும் வலிமை மிக்க யானைகளும் கொண்டு தோன்றியதால், இந்த லக்ஷ்மிக்கு கஜலக்ஷ்மி என்று திருநாமம் அமைந்தது. கஜ என்றால் யானை என்று அர்த்தம்.

வேழம் என்றால் யானை. ‘திரு’ என்பது லக்ஷ்மியைக் குறிக்கும். கஜலக்ஷ்மியை வேழத்திரு என்றும் போற்றுகிறது புராணம். கால்நடைகளைப் பாதுகாப்பவள். அவற்றால் இல்லத்தில் செல்வங்களைத் தருபவள். தன்னை வணங்குவோருக்கு, அளவிட முடியாத செல்வங்களையும் நன்மைகளையும் வழங்கும் கருணைக் கடலெனத் திகழ்கிறாள் பாற்கடல் நாயகி.

அனைத்து சிவாலயங்களிலும் பிராகார வலம் வரும் போது, முருகப்பெருமான் சந்நிதியை அடுத்து, கஜலக்ஷ்மியின் சந்நிதியை தரிசிக்கலாம்.

இல்லத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ஸ்ரீகஜலக்ஷ்மியை அவளுக்கு உரிய ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து, மனதார வேண்டிக்கொள்ளலாம்.

ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம் :

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச

வராபய கராந் விதாம்

அப்ஜத்வய கராம்போஜாம்

அம்புஜா சநஸமஸ்த்திதாம்

ஸஸிவர்ண கடேபாப் யாம்

ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்

சர்வாபரண சோபாட்யாம்

சுப்ரவஸ்த் ரோத்தரீயகாம்

சாமரக்ரஹ நாரீபி :

ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :

ஆபாதலம்பி வசநாம்

கரண்ட மகுடாம் பஜே.

இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் குளித்து முடித்து, விளக்கேற்றி சொல்லி வாருங்கள். முடிந்தால், வெண்மை நிற மலர்கள், தாமரை மலர் கொண்டு கஜலக்ஷ்மியை அலங்கரியுங்கள். பால் பாயசம் நைவேத்தியம் படைப்பது இன்னும் வளம் சேர்க்கும்.

ராஜயோகம் தந்திடுவாள் கஜலக்ஷ்மி. கெளரவப் பதவி தேடி வரும். உத்தியோகத்திலும் தொழிலும் உயர்வுகளைத் தந்திடுவாள். சகல ஐஸ்வரியங்களும் தனம் தானியமும் அளித்துக் காத்திடுவாள் தேவி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

9 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்