சந்நியாசி என்பவன் சிவனே

By என்.ராஜேஸ்வரி

நினைவஞ்சலி: சுவாமி தயானந்த சரஸ்வதி

ரிஷிகேஷ் ஆசிரமம், கங்கைக் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் உள்ள கங்காதரேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள படிக்கட்டு வழியாக இறங்கினால் கங்கையில் பாதுகாப்பாகக் குளிக்கலாம். இங்கு அமர்ந்தால் தியானம் கைகூடும் வகையில் சுற்றிலும் ஆழ்ந்த அமைதி சூழ்ந்துள்ளது. உலக அமைதியை என்றும் விரும்பியவர் தயானந்தா. ரிஷிகேஷில் அவர் உருவாக்கிய ஆசிரம வளாகத்தில், என்றென்றும் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அவரது அதிஷ்டானம் (மகாசமாதி) அவரது விருப்பபடியே அமையவுள்ளது.

பக்தர்களின் குறைகளை நேரிடையாகக் கேட்டு அவர்களுக்கு ஆறுதலையும் தேறுதலையும் ஒரு தந்தையைப் போல எடுத்துக் கூறும் அன்புடையவர் சுவாமி தயானந்த சரஸ்வதி.

சின்மயானந்தா அளித்த சந்நியாசம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குடி என்ற ஊரில் 1930-ம் ஆண்டு பிறந்தார் சுவாமி தயானந்த சரஸ்வதி. பூர்வாசிரமத்தில் நடராஜன் என்ற பெயர் தாங்கிய இவரின் தாய் வாலாம்பாள், தந்தை கோபால ஐயர். சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், 1950-களில் சுவாமி சின்மயானந்தாவின் உரைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது சீடரானார். இல்லற வாழ்வில் விருப்பம் இல்லாத அவருக்குத் துறவறத்தில் ஆர்வம் கூடியது. சின்மயானந்தா இவருக்கு சந்நியாசம் வழங்கினார். சுவாமி தயானந்த சரஸ்வதி என்று பெயருமிட்டார்.

சந்நியாசி என்பவன் சிவனே என்ற கொள்கையை உடையவர் தயானந்த சரஸ்வதி. சின்மயானந்தாவின் எழுத்துப் பணிகளில் பெரிதும் உதவிய தயானந்தா, பின்னாளில் தனது உரைகளைப் புத்தகமாகவும், குறுந்தகடுகளாகவும் வெளியிட்டார். இன்றும் அவரது குரலில் பகவத் கீதை, உபநிடதங்கள் ஆகியவற்றை இவற்றின் மூலம் கேட்கலாம். அமைதி வழியில் ஆன்மிகத்தை ஆழ வேரூன்றச் செய்தவர் தயானந்தா.

அர்ஷ வித்யா குருகுலம்

இந்தியப் பாரம்பரியம், அத்வைத வேதாந்தம், சமஸ்கிருதம், யோகா, ஆயுர்வேதம், ஜோதிடம் மற்றும் இந்து மதக் கொள்கைகளை விளக்குவதற்காக அர்ஷ வித்யா குருகுலத்தை 1986 ம் ஆண்டு தொடங்கினார் தயானந்தா. இதில் இந்தியர்களும், மேல் நாட்டவர்களும் பயின்றனர். இந்த ஆன்மிக நிறுவனம் மூலம் உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் ஆகிய நூல்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கவுரை எழுதிப் பாடங்கள் நடத்தினார்.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாவட்டத்தில் உள்ள சேய்லர்ஸ்பெர்க் என்ற இடத்தில் சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவருக்கு ஆசிரமம் உள்ளது. சுவாமிஜி நேரடியாக கோவை ஆனைக்கட்டி, ரிஷிகேஷ், சேய்லர்ஸ்பெர்க் ஆகிய தனது ஆசிரமங்கள் அமைந்த இடங்கள் உட்பட பல இடங்களில் உபன்யாசங்கள், உபநிடதம் மற்றும் பகவத் கீதை விளக்கவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.

ஏழை, எளியோர்களிடம் மிகுந்த அன்பு கொண்ட இவர், ஆனைக்கட்டியை ஒட்டியுள்ள கிராமங்களில் சீர்திருத்தப் பணிகளைப் பல கோடி ரூபாய் செலவில் நடத்திவந்தார். இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் கல்வி அளிக்க `எய்ம் ஃபார் சேவா’ என்ற இயக்கத்தை ஏற்படுத்தினார். இதன் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராம மக்களும் எழுத்தறிவைப் பெற ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டார்.

சுவாமி சின்மயானந்தா மூலம் சந்நியாசம் பெற்ற சுவாமி தயானந்த சரஸ்வதி, பெண்கள் சம உரிமை பெறும் வண்ணம், சந்நியாசத்தை விரும்பிய பெண்களுக்கும் வழங்கிப் பெண்மையைக் கவுரவித்தவர்.

உள்ளார்ந்த முதிர்ச்சி எது?

படைத்தது எதுவோ, எங்கெங்கிலும் நிறைந்திருப்பது யாரோ, எல்லா உயிரிடத்திலும் இருப்பவர் எவரோ, யார் பிறப்பே இல்லாதவரோ, யார் எல்லையற்றவராக இருக்கிறாரோ, எது அனைவருக்கும் இனியதோ, யார் ஆனந்தத்தின் உண்மையான ஊற்றோ, யாரிடத்தில் நாமெல்லாம் இருக்கிறோமோ, யார் எல்லாவற்றுக்கும் காரணியோ, வேதத்தில் எதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அவரே கடவுளாக வழிபடப்படவேண்டியவர்.

l படைப்பில் எந்த நபரையும் அவர் விரும்பாத வரை, உங்களால் மாற்றவே முடியாது. அந்த நபர் மாறுவதற்கான சூழ்நிலைகளை மட்டுமே உங்களால் மாற்ற முடியும்.

l உன்னிடமுள்ள சிறந்ததை இந்த உலகத்துக்குக் கொடு, சிறந்தது உனக்குத் திரும்பியளிக்கப்படும்.

l மற்றவர் எப்படி இருக்கின்றனரோ அதற்கான சுதந்திரத்தை நீங்கள் எவ்வளவு அளிக்கிறீர்களோ, அந்த அளவு சுதந்திரம் உங்களுக்கும் உண்டு.

l மனித உயிரியின் உள்ளார்ந்த முதிர்ச்சி என்பது சரி, தவறை அறிவது மட்டுமல்ல. தவறான ஒரு செயலைப் புரியும்போது எதை இழக்கிறோம் என்பதை அறிவதுதான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

20 hours ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்