தடைகள் தீர்க்கும் பஞ்சமி வழிபாடு; வரமெல்லாம் தருவாள் வாராஹி

By வி. ராம்ஜி

பஞ்சமி திதி நாளில், வராஹிதேவியை வழிபடுங்கள். எதிர்ப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, காரியங்களில் வீரியத்தைக் கொடுப்பாள். வெற்றியைத் தந்தருள்வாள். 5.11.2020 வியாழக்கிழமை, பஞ்சமி.

சப்த மாதர்களில் வாராஹி தேவியும் ஒருவர். இந்த ஏழுதேவியரிலும் காரியத்திலும் வீரியத்திலும் மகாசக்தி எனப் போற்றப்படுகிறாள் வாராஹிதேவி. பஞ்சமி திதி என்பது வாராஹி தேவியை வணங்குவதற்கு உரிய அற்புத நாள். பஞ்சமி திதியில் வாராஹிதேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். நம்முடைய அனைத்துச் செயல்களிலும் துணையிருந்து நம்மைக் காத்தருள்வாள் என்கின்றனர் ஆச்சார்யப்0 பெருமக்கள்.

வாராஹிதேவிக்கு, பூண்டு கலந்து, தோல் நீக்காத உளுந்த வடை நைவேத்தியமாகப் படைப்பது ரொம்பவே விசேஷம். நவதானிய வடை, மிளகு சேர்த்த வடை, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம் என ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்தால், குளிர்ந்து போவாளாம் தேவி! அப்போதும் நாம் வேண்டுவதையெல்லாம் நிறைவேற்றித் தந்திடுவாள்.

பஞ்சமி திதியில் வாராஹியின் மூலமந்திரம் சொல்வது, தீயசக்திகளை நம் பக்கம் நெருங்கவிடாமல் தடுக்கும். எதிரிகள் பலமிழப்பார்கள். பஞ்சமி திதியில், மூல மந்திரம் சொல்லி வாராஹியை வழிபடுங்கள்.

வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பணம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.

என்று சொல்லி வாருங்கள்.

மேலும்...

ஓம் ஐம் க்லெளம் ஐம்நமோ பகவதீ வார்த் தாளி , வார்த்தளி
வாராஹி வராஹமுகி வராஹமுகி அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம்
ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

என்று சொல்லி வழிபடுங்கள்.

அதேபோல்,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாராஹி தேவ்யை நம:
க்லீம் வாராஹிமுகி ஹ்ரீம்
ஸித்திஸ்வரூபிணி ஸ்ரீம்
தனவ சங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா.

என்று வாராஹி தேவியை தினமும் காலையும் மாலையும் ஜபித்து பிரார்த்தனை செய்யுங்கள்.

வாராஹி காயத்ரி மந்திரம்:

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்

என்று காயத்ரியைச் சொல்லி வாராஹி தேவியை தினமும் 11முறை சொல்லி ஜபித்து பிரார்த்தியுங்கள். தடைகள் அகலும். வளர்பிறை பஞ்சமி விசேஷம் என்றாலும் ஒவ்வொரு பஞ்சமியிலும் வழிபடுங்கள்.

மொச்சை, சுண்டல் நைவேத்தியம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். சுக்கு அதிகம் சேர்த்து பானகம் செய்தால், அந்த வெல்லக் கரைசல் போல், நம் வாழ்வில் இன்பத்தையும் நிம்மதியையும் சேர்த்துக் கலந்திடுவாள் வாராஹி.

நாளை 5ம் தேதி பஞ்சமி திதியில், வாராஹியை வழிபடுங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

மேலும்