கோவை நகரில் உள்ளது பேரூர் எனும் ஊர். இங்கே அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இந்தத் தலத்தில் உள்ள சிவனாரின் திருநாமம் பட்டீஸ்வரர். காமதேனு பசு வழிபட்டு வரம் பெற்ற திருத்தலம் இது என்கிறது ஸ்தல புராணம்.
இந்தத் தலத்தில், காமதேனுப் பசு வழிபட்டுள்ளது. பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாதரும் வணங்கி, தவமிருந்து வரம் பெற்றனர் என விவரிக்கிறது ஸ்தல புராணம். பரசுராமர், பஞ்ச பாண்டவர்கள் இந்தத் தலத்தில் நெடுங்காலம் தவமிருந்தார்கள் என்றும் இதன் பலனாக சிவனாரின் அருளைப் பெற்றார்கள் என்றும் ஸ்தல புராணம் விவரிக்கிறது.
பதினெட்டு சித்தர்கள் என்று சொல்லுவோம். அகத்தியர், போகர், திருமூலர், தன் வந்திரி, வால்மீகி, கொங்கணர், கோரக்கர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், கமலமுனி, கருவூரார், பாம்பாட்டிச் சித்தர், மச்சமுனி, ராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர் என பதினெட்டு சித்தர்கள் உள்ளனர்.
இவர்கள் கோரக்கச் சித்தர், 800 ஆண்டுகளும் 32 நாட்களும் வாழ்ந்ததாகச் சொல்கிறது புராணம். மச்சமுனியின் பேரருளால் கோ சாலையில் அவதரித்தவர் இவர். காமதேனு பசு வழிபட்ட தலம், கோ சாலையில் அவதரித்த கோரக்க சித்தர் என பல தொடர்புகள் பட்டீஸ்வரர் கோயிலுக்கு உண்டு.
கோயிலுக்குப் பின்னே, பாலதண்டாயுதபாணி சந்நிதி அமைந்துள்ளது. இந்த சந்நிதிக்கு அருகே, வில்வ மரத்தடியில் அமர்ந்துகொண்டு, கோரக்க சித்தர் பெருமான் தவமிருந்தார். அவருக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம்.
எனவே, வியாழக்கிழமை உள்ளிட்ட நாட்களில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் வணங்கிவிட்டு, வில்வமரத்தடிக்கு வாருங்கள். கோரக்கச் சித்தர் தவமிருந்த இடத்தை கவனித்தபடி, கண்கள் மூடி மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.
நம் பிரச்சினைகளையும் துக்கங்களையும் தீர்த்துவைப்பார் சிவனார். கோரக்கச் சித்தரின் பேரருளையும் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
20 hours ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
23 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago