அஷ்டகம் சொன்னால் கஷ்டம் தீர்ப்பார் தட்சிணாமூர்த்தி! 

By வி. ராம்ஜி

வியாழக்கிழமையை குருவாரம் என்பார்கள். குருவாரம் என்று சொல்லப்படுகிற வியாழக்கிழமை, குரு பிரம்மாவையும் சிவ சொரூபமாகத் திகழும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் மகான்களையும் சித்தர் பெருமக்களையும் வணங்கி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளும் பிரார்த்தனைகள் இவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சிவாலயங்களில், சிவ கோஷ்டத்தில், ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு சந்நிதி அமைந்திருக்கும். தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி என்று போற்றுகிறார்கள். தெற்குப் பார்த்த நிலையில் வீற்றிருக்கும் தெய்வங்கள், பொதுவாகவே ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளுவார்கள் என்பது ஐதீகம். இன்னல்களையெல்லாம் தீர்த்து வைப்பார்கள். இம்மையில் எல்லா நிம்மதிகளையும் சந்தோஷங்களையும் அருளுவார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

வியாழக்கிழமையில், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்குவோம். கல்லால மரத்தடியில் அமர்ந்துகொண்டு, சனகாதி முனிவர்களுக்கு சிவ யோகங்களை போதித்தருளும் தட்சிணாமூர்த்தியிடம் மனம் ஒருமித்து வேண்டிக்கொண்டால், புத்தியில் தெளிவையும் பேச்சில் இனிமையையும் செயலில் சாதுர்யத்தையும் வழங்கி அருளுவார் தட்சிணாமூர்த்தி.

வியாழக்கிழமைகளில், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் சொல்லிப் பாராயணம் செய்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து, சுண்டல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி அஷ்டகம் :

அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
என்று சொல்லி வணங்கிவிட்டு தொடர்ந்து சொல்லுங்கள்.

நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

த்ரிபுவனகுரும் ஆகமைக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!

வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!

இந்த அஷ்டகத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். கஷ்டமெல்லாம் தீர்த்தருள்வார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

3 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்