நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவியைக் கொண்டாடுங்கள். அப்படி ஒன்பது நாளும் ஆராதிக்க இயலாதவர்கள், விரதமிருந்து அன்னையை வணங்க இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை நன்னாளில் விரதம் இருந்து வணங்குங்கள். சகல ஐஸ்வர்யங்களையும் பெறுங்கள். சங்கடங்களும் கவலைகளும் நீக்கியருள்வாள் தேவி!
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்கான காலம். பெண் தெய்வங்களை வழிபடுவதற்கான காலம். இந்த நவராத்திரி பண்டிகை என்பதே பெண்களுக்கான மிக முக்கியமான பண்டிகை. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பெண்கள் குழுவாகக் கூடி, பெண் தெய்வங்களை ஆராதிப்பதுதான் நவராத்திரி வைபவத்தின் தாத்பரியம்.
ஒன்பது நாட்களும் பெண்கள் பூஜித்து வழிபடுகிறார்கள். பத்தாம்நாள் குடும்பமாக எல்லோருமே வழிபடவேண்டும். அதுதான் சரஸ்வதி பூஜை. விஜய தசமித் திருநாள். சகல யோகங்களும் தரும் சரஸ்வதி பூஜை நன்னாளில், வீடுகளிலும் அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து ஸ்ரீசரஸ்வதிதேவியை வழிபடுவது வழக்கம்.
நவராத்திரியில் தினமும் வீட்டில் அம்பாள் வழிபாடு செய்யவேண்டும். கொலு வைத்திருப்பவர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கே நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ளவேண்டும். சில வீடுகளில், ஒன்பதுநாளும் அணையா விளக்கு ஏற்றி வைத்து பூஜையறையில் வைத்து வணங்குவார்கள். சரஸ்வதி பூஜையன்று எல்லோரும் சேர்ந்து வணங்கவேண்டும்.
சரஸ்வதி பூஜைக்கு முதல்நாள், பூஜை செய்யும் இடத்தை கழுவி, துடைத்து சுத்தம் செய்யவேண்டும். லேசாக சந்தனம் தெளிக்கவேண்டும். குங்குமம் இடவேண்டும். ஸ்ரீசரஸ்வதிதேவியின் திருவுருவப் படத்துக்கோ அல்லது சிலைக்கோ... படைப்பதற்கு வைக்கவேண்டிய குழந்தைகளின் புத்தகங்கள், பேனா ஆகியவற்றுக்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். அடுத்து, அம்பாளுக்கும் புத்தகங்களுக்கும் பூக்களைச் சொரியவேண்டும். மாலை அணிவித்து அன்னையை அலங்கரிக்கவேண்டும்.
நைவேத்தியத்துக்காகப் படைக்கப்படும் உணவை, இலையில் வைத்துக் கொள்ளுங்கள். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைப்பது மிகவும் உகந்தது. மேலும், பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் பழங்களையும் படையலுக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
செம்பருத்தி, ரோஜா, செவ்வரளி, வெண்தாமரை முதலான மலர்களை அன்னை சரஸ்வதிதேவிக்கு பயன்படுத்தலாம். எல்லாவற்றுக்கும் மேலாக முதலில், மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்துவிட்டு, கலைவாணியைப் பூஜித்து ஆராதிக்கவேண்டும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவியைக் கொண்டாடுங்கள். அப்படி ஒன்பது நாளும் ஆராதிக்க இயலாதவர்கள், விரதமிருந்து அன்னையை வணங்க இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை நன்னாளில் விரதம் இருந்து வணங்குங்கள். சகல ஐஸ்வர்யங்களையும் பெறுங்கள். சங்கடங்களும் கவலைகளும் நீக்கியருள்வாள் தேவி!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
9 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago