புரட்டாசி மாதத்தின் கடைசி ஏகாதசி; ஏழுமலையானை வேண்டுவோம்! 

By வி. ராம்ஜி

புரட்டாசி மாதத்தின் கடைசி ஏகாதசி இன்று (13.10.2020). இந்த நாளில், பெருமாளை தரிசனம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். வீட்டில் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளுங்கள். கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நிவர்த்தி செய்து அருளுவார் மகாவிஷ்ணு.

புரட்டாசி மாதம் என்பது புண்ணியம் மிகுந்த மாதம் என்பது ஐதீகம். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை ஸேவிப்பதற்கும் ஆராதிப்பதற்கும் விரதம் மேற்கொள்வதற்குமானது என்று போற்றப்படுகிறது.

இந்த மாதத்தில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று அடிக்கடி தரிசனம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். நெற்றியில் நாமம் இட்டுக்கொள்வதும் இந்த மாதத்தின் முக்கிய வழிபாடுகளில் ஒன்று.

மேலும் 108 திவ்விய தேசங்கள் என்றும் 108 திருப்பதி என்றும் போற்றப்படுகிற பெருமாள் க்ஷேத்திரங்களில் சில ஆலயங்களுக்குச் சென்று குடும்ப சகிதமாகச் சென்று தரிசித்து மகிழ்வார்கள் பக்தர்கள்.

புரட்டாசி மாதம் முழுக்கவே விரதம் மேற்கொள்கிற பக்தர்களும் உண்டு. அசைவம் சாப்பிடுகிறவர்கள் கூட, புரட்டாசி மாதத்தில், அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். புரட்டாசி மாதத்தின் மகத்துவத்தை உணர்ந்து, பெருமாள் கோயிலுக்குச் செல்வார்கள். வீட்டில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வார்கள். மகாலக்ஷ்மியை ஆராதிப்பார்கள்.

மாதந்தோறும் ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களும் உண்டு. மார்கழியின் வைகுண்ட ஏகாதசி வெகு விசேஷமானது என்றாலும் மாதந்தோறும் வருகிற ஏகாதசியும் விசேஷமானதுதான். அதிலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி, இன்னும் சிறப்பு வாய்ந்தது.

இன்று 13.10.2020 செவ்வாய்க்கிழமை ஏகாதசி. எனவே அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளை கண்ணாரத் தரிசியுங்கள். மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி சார்த்துங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து ஆராதனை செய்யுங்கள்.

இதுவரை இருந்த கஷ்டங்களையும் நஷ்டங்களையும் நீக்கி அருளுவார் வேங்கடவன். வீட்டில் உள்ளவர்களிடையே நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்தித் தருவார். வாழ்வில் நல்லன அனைத்தையும் தந்தருளும் மகாவிஷ்ணுவை ஆராதனை செய்யுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவார் மலையப்ப சுவாமி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

19 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

மேலும்