துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் செவ்வாயும் புதனும் குருவும் சஞ்சரிப்பதால் உற்சாகம் பெருகும். எதிர்ப்புகள் விலகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை உண்டு. வழக்குகள், பந்தயங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கணிதம், பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் அனுகூலம் உண்டாகும். 28-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆம் மாறுவதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழி பிறக்கும். பெண்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். 12-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசுப் பணியாளர்களும், அரசியல்வாதிகளும் பொறுப்புடன் செயலாற்றவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சூரியனுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்துகொள்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் புதன், குரு ஆகியோருடன் கூடி இருப்பது விசேடமாகும். சூரியன், ராகு ஆகியோர் 11-ல் உலவுவது சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவிபுரிய முன்வருவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் ஆகிய சொத்துக்கள் சேரும். மனத்துணிவு கூடும். எதிர்ப்புகள் விலகும். வியாபாரம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பொறியியல் துறை லாபம் தரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். உழைப்பு அதிகரிக்கும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்பட்டு விலகும். மக்களால் மன அமைதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பரிகாரங்களைச் செய்துவருவது நல்லது. ஆஞ்நேயரையும் விநாயகரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசியாதிபதி குரு 9-ல் செவ்வாய், புதன், ஆகியோருடன் கூடியிருப்பது சிறப்பாகும். சூரியன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். தான தருமப் பணிகளில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கலைஞர்கள் வெற்றிநடைபோடுவார்கள். தம்பதியர் உறவுநிலை திருப்தி தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தாய் நலனில் கவனம் தேவை. சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
நிறங்கள்: புகை நிறம். வெண்மை, இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 6, 9.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் அர்ச்சனைகளைச் செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் 11-ல் சனியும் உலவுவது நல்லது., அந்தஸ்தும் மதிப்ப்ம் உயரும். பொதுப்பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். தொழிலாளர்களது நிலை உயரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குரு, செவ்வாய் ஆகியோர் எட்டிலும், 9-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் மக்கள் நலமும் தந்தை நலமும் பாதிக்கப்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், இயந்திரப் பணியாளர்கள், பொறியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. 28-ம் தேதி முதல் சுக்கிரன் எட்டாமிடத்திற்கு மாறுவதால் கலைஞர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
பரிகாரம்: செவ்வாய், குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
எண்கள்: 5, 7, 8.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலை உயரும். மன உற்சாகம் பெருகும். குடும்பத்தில் சலசலப்புக்கள் குறையும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் நிறைவேறும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். நண்பர்கள் உதவி புரிவார்கள். செய்துவரும் தொழிலில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் உருவாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும். கண், முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதியவர்களிடம் நெருக்கம் வேண்டாம். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். தந்தை நலனில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 25, 28.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 8.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது. சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
மீன ராசி வாசகர்களே!
செவ்வாயும் புதனும் சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர் நிலை உயரும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை புரிவார்கள். வீர, தீரச் செயல்களில் ஈடுபாடு உண்டாகும். குருபலம் குறைந்திருப்பதால் உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் பாதிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும்.
எண்கள்: 5, 6. 9
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 24, 25, 28.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், சிவப்பு, பச்சை.
பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்குப் பரிகாரங்களைச் செய்யவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago