செவ்வாய்... சஷ்டி... கந்தனுக்கு செவ்வரளி

By வி. ராம்ஜி


செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வரும் நன்னாளில், முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். செவ்வாய் தோஷம் முதலான தோஷங்கள் விலகும். அற்புதமான இந்த நன்னாளில், வேலவனை வணங்குங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். உங்கள் வேண்டுதல்களையெல்லாம் வேலவனிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் ஞானவேலன். தொழிலில் அபிவிருத்தியை ஏற்படுத்தித் தருவான் அழகுமுருகன்.

ஐப்பசி மாதத்தில் வரும் சஷ்டி கந்தசஷ்டி என கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹார நிகழ்வு திருச்செந்தூர் உள்ளிட்ட பல ஆலயங்களில் விமரிசையாக நடைபெறும். கந்தசஷ்டி என்பது மட்டுமில்லாமல், மாதந்தோறும் சஷ்டியே விசேஷம்தான்.

பெரும்பாலான பக்தர்கள், மாதந்தோறும் வரக்கூடிய சஷ்டியில், விரதம் மேற்கொள்வார்கள். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை தரிசிப்பார்கள். விரதம் தொடங்கி மாலையில் விரதத்தை நிறைவு செய்துவிட்டு, மீண்டும் ஆலயம் சென்று முருகனை வணங்கி வேண்டிக்கொள்வார்கள்.

சஷ்டியில் முருக தரிசனம் செய்தால், கஷ்டங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். காலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி முருகனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது குடும்பத்தில் பல நல்லதுகளைக் கொண்டு வந்து சேர்க்கும்.

செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். எனவே, செவ்வாய்க்கிழமைகளில், முருகப்பெருமானையும் அங்காரக வழிபாட்டையும் மேற்கொண்டால், செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். மாங்கல்ய வரம் கிடைக்கும். திருமணம் தடைப்பட்ட நிலையெல்லாம் மாறி, விரைவில் திருமணம் கைகூடும்.

வழக்கு முதலான விஷயங்களில் வெற்றியைத் தந்தருள்வார் வெற்றிவேலன். செவ்வாய்க்கிழமையும் கந்தனுக்கு விசேஷம். சஷ்டியும் வேலவனுக்கு சிறப்பான நாள். நாளைய தினம் 22ம் தேதி செவ்வாய்க்கிழமை. அத்துடன் சஷ்டி திதியும் இணைந்து வருகிறது.

அற்புதமான இந்த நன்னாளில், வேலவனை வணங்குங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். உங்கள் வேண்டுதல்களையெல்லாம் வேலவனிடம் முறையிட்டு பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் தடைகளையெல்லாம் தகர்த்து அருளுவான் ஞானவேலன். தொழிலில் அபிவிருத்தியை ஏற்படுத்தித் தருவான் அழகுமுருகன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்