புரட்டாசி முதல் வெள்ளிக்கிழமையில், மகாலக்ஷ்மியை வழிபடுங்கள். சகல செளபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா இன்னல்களில் இருந்தும் விடுபடச் செய்வாள் மகாலக்ஷ்மி தேவி. உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும். கவலைகள் யாவும் பனியென மறைந்து போகும். மகாலக்ஷ்மி ஸ்துதி சொல்லி வேண்டுங்கள். மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் லக்ஷ்மிதேவி.
புண்ணியம் நிறைந்த மாதம் என்று புரட்டாசியைச் சொல்லுவார்கள். புரட்டாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். மகாவிஷ்ணுவை ஆராதிக்கிற மாதம். இந்த மாதத்தின் பிறப்பில் இருந்து, தொடக்கத்தில் இருந்து பெருமாள் கோயிலுக்குச் செல்வதும் பெருமாளை வழிபடுபதும் எண்ணற்ற நன்மைகளை வழங்கி அருளும்.
புரட்டாசி மாதம் முழுவதுமே தினமும் துளசி தீர்த்தம் பருகுவதும் துளசிச் செடிக்கு தண்ணீர் விடுவதும் தடைப்பட்ட மங்கல காரியங்களை நடத்தித் தந்தருளும்.
அதேபோல், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாலக்ஷ்மியை நினைத்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடுவது லக்ஷ்மி ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வழிபடுவதும், விசேஷமானது. நீண்டகாலக் கடன் தொல்லையில் இருந்து விடுபட வழியைக் கொடுப்பாள் மகாலக்ஷ்மி.
வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். சுக்கிர யோகம் வாழ்வில் மிக மிக முக்கியம். சுக்கிர யோகம் வேண்டுமெனில் மகாலக்ஷ்மியை வேண்டுவோம். வெள்ளிக்கிழமையில், காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். மகாலக்ஷ்மிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது கேசரி அல்லது ஏதேனும் இனிப்பைக் கொண்டு நைவேத்தியம் செய்யுங்கள்.
» நாலுபேருக்கு தயிர்சாதம் தரலாமா நீங்கள்?
» ’உதவிக்கரம் நீட்டுங்கள்; உங்களுக்கு உதவி செய்ய நான் வருவேன்!’ - பகவான் சாயிபாபா
உங்கள் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடும். துக்கங்கள் அனைத்தும் காணாமல் போகும். கவலைகள் யாவும் பனியென மறைந்து போகும்.
மகாலக்ஷ்மி ஸ்துதி சொல்லி வேண்டுங்கள். மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவாள் லக்ஷ்மிதேவி.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
7 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago
ஆன்மிகம்
9 days ago