சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்தநாளில்... திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி பூஜை நேரலையில்!  - வீட்டிலிருந்தே ஆன்லைனில் தரிசியுங்கள்

By வி. ராம்ஜி

மாத சிவராத்திரியும் பிரதோஷமும் இணைந்த அற்புதமான நாளில், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பிரதோஷ பூஜை தரிசனத்தை, ஆன்லைனில் வீட்டிலிருந்தபடியே தரிசியுங்கள்.

சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது தியாகராஜ சுவாமி திருக்கோயில். அருளும் பொருளும் அள்ளித்தரும் அற்புதமான திருத்தலம். புராண - புராதனப் பெருமைகள் கொண்ட பிரமாண்டமான ஆலயம்.

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் பிரதோஷ பூஜையும் ஒன்று. இந்த பிரதோஷ வழிபாட்டை, உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் அங்கிருந்தபடியே வீட்டிலிருந்தபடியே தரிசிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் ஒளிபரப்பி வருகிறது ஆலய நிர்வாகம்.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 15.09.2020 செவ்வாய் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், கண்ணாரத் தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்துகொள்ளலாம். அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி அருளைப் பெறலாம்.

நாளைய தினம் செப்டம்பர் 15ம் தேதி பிரதோஷம் மட்டுமின்றி மாத சிவராத்திரியும் கூட. எனவே சிவபெருமானுக்கு உரிய அற்புதமான இந்த நாளில், சிவராத்திரி, பிரதோஷம் இரண்டும் இணைந்த நாளில், வீட்டிலிருந்தபடியே தரிசியுங்கள்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யுங்கள். இந்த தகவலினை உங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும், அறிந்தவர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் தரிசித்து சிவபெருமானின் பேரருளைப் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

4 hours ago

ஆன்மிகம்

5 hours ago

ஆன்மிகம்

10 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்