செப்டம்பர் 17 விநாயக சதுர்த்தி
வீதிதோறும் வீற்றிருந்து வினைகளைத் தீர்ப்பவர் விநாயகர். அவன் இல்லம்தோறும் வந்து குடும்பத்தைக் குதூகலப்படுத்தும் நாள் விநாயக சதுர்த்தி. அவரை வணங்கினால் அளப்பரிய நன்மைகளை பெறலாம் என்பது ஐதிகம். விநாயக சதுர்த்தி என்ற ஆவணி மாத சதுர்த்தி நாள் அளப்பரிய மகிழ்ச்சியையும் வளத்தையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.
புதிதாக எதைத் தொடங்கினாலும் விநாயகரை வேண்டிப் பணிதல் அவசியம். முழுமுதற் கடவுளான அவரைப் பூஜித்தாலும் கூட, பூஜை ஆரம்பிக்கும் முன், முதலில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து அவரது அனுமதி பெற்றே பூஜிக்க வேண்டும்.
வீட்டுக்கு அழைத்துச் செல்லுதல்
ஒரு அழகிய மனைப்பலகையில் கோலமிட்டு, அதற்கு தெய்வீக அந்தஸ்து அளிக்க வேண்டும். இல்லத்தில் உள்ள குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தயாரித்து வைத்துள்ள அழகிய ஆசனத்தை இரு கைகளிலும் ஏந்தி விநாயகர் பொம்மையைக் கொண்டுவர வேண்டும்.
வீட்டிற்கு வந்த விநாயகரை மனதாரத் துதித்து அருகு, பலவகைப் பூக்கள், அட்சதை ஆகியவற்றை விநாயகர் மீது தூவி வழிபட வேண்டும். முன்னரே தயார் செய்து வைத்திருக்கும் அப்பம், வடை, பாயசம், கொழுக்கட்டை, அன்னம், அவல் பொரி பழங்கள் ஆகியவற்றைப் படைக்க வேண்டும். தீப ஆராதனைக்குப் பின் விநாயகர் சிலைக்கு அருகில் ஒரு கொழுக்கட்டையை எடுத்து வைக்க வேண்டும்.
பிரசாதங்களை உட்கொண்ட பின் அக்கம் பக்கத்தினருக்கும், இல்லத்தில் வேலை செய்யும் பணியாளருக்கும் உரிய அன்புடன் அளிக்க வேண்டும். மறுநாள் சர்க்கரை போட்ட பால் நிவேதனம் செய்து புனர் பூஜையுடன் நிறைவு செய்ய வேண்டும். கஷ்டங்களைப் போக்குபவர் கணபதி. மகிழ்ச்சியை அளிப்பவர் மகாகணபதி. கணபதியுடன் மங்கலம் வரட்டும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
11 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago