கால சர்ப்ப தோஷம் நீக்கும் நாகராஜ வழிபாடு

By வி. ராம்ஜி

காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கவல்லது நாகராஜ வழிபாடு. நாகராஜரை வழிபடுங்கள். நாகராஜ காயத்ரி சொல்லுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

நவக்கிரகங்களில், ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலானவை இருந்தால், திருமணம் முதலான சந்ததி தடைகள் வரும். காரியத்தில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும்.

எதைத் தொட்டாலும் நஷ்டம், தோல்வி, அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல், வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும்.

கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியக் குலைக்கவல்லது சர்ப்ப தோஷம்.

சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ராகுகால வேளையில் நாகராஜ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக, எல்லா நாட்களிலும் உள்ள ராகுகாலவேளையில், நாகராஜரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

அப்போது, நாகராஜ காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள். சர்ப்பம் முதலான தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

ஸ்ரீநாகராஜ காயத்ரி

ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
நாகமணி சேகராய தீமஹி
தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்

அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம்.

இந்த நாகராஜ காயத்ரியைச்சொல்லுங்கள். வழிபடுங்கள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து வழிபட்டு வாருங்கள். கால சர்ப்ப தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். உத்தியோகம் நிலைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

11 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

மேலும்