மேஷம்
ராசிநாதன் செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதாலும் புதன், சுக்கிரன் ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதாலும் முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். எதிரிகள் விலகிப் போவார்கள். நல்லவர்களின் தொடர்பால் நலம் பெறுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்களால் வருமானம் கூடும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும்.
24-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 27-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்துவது அவசியமாகும். வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் அகலக் கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ,மே 24, 25, 26. திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, சிவப்பு.l எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கும் துர்கைக்கும் அர்ச்சனை செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவுடன் பேசிப் பழகவும்.
ரிஷபம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 11-லும் குரு 2-லும் உலவுவதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். பல வழிகளில் பணம் வரும். பாக்கிகள் வசூலாகும். கடன் தொல்லை குறையும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஜலப் பொருட்களால் லாபம் வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 12-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவதால் ஞான, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். 27-ஆம் தேதி முதல் புதன் வக்கிர நிலை பெறுவதால் வியாபாரத்தில் முழுக்கவனம் தேவை. இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை ஏற்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25. l திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், புகை நிறம், வெண்மை, இளநீலம். l எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது ஒன்றே கோசாரப்படி சிறப்பாகும். சுக்கிரன் 10-ல் இருந்தாலும் தன் உச்ச ராசியில் உலவுவதால் நலம் உண்டாகும். 27-ஆம் தேதி வரையிலும் சந்திரனும் சாதகமாக உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிடைக்கும். குடும்ப நலம் சிறக்கும். தொழிலில் முன்னேற்றம் காணலாம். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.
பொருளாதார நிலை சீராக இருந்துவரும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 11-ஆமிடம் மாறுவதால் கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25, 26. l திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன். l எண்கள்: 6, 7.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நலம் தரும்.
கடகம்
செவ்வாய் 3-ல் உலவுவது விசேடமாகும். சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகியோரும் சாதகமாக இருப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு கூடும். அரசுப் பணியாளர்களுக்கும் நிர்வாகத் துறையினருக்கும் அனுகூலமான போக்கு தென்படும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
கலைஞர்களுக்கும், மாதர் களுக்கும் உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 10-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 27-ஆம் தேதி முதல் புதன் வக்கிரம் பெறுவதால் மாணவர்கள் படிப்பில் முழுக் கவனம் செலுத்துவது நல்லது.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25, 26. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குருவுக்கு முல்லை மலர் மாலை அணிவித்து பசு நெய் தீபமேற்றி வணங்கவும். பெரியவர்களை வணங்கி வாழ்த்துக்களைப் பெறவும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 8-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் குருவும் உலவுவதால் புதிய முயற்சிகள் கைகூடும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பண வரவு கூடும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
எலெக்ட்ரானிக் போன்ற துறைகள் லாபம் தரும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 9-ஆமிடம் மாறிக் கேதுவுடன் கூடுவதால் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். பொன்னிறப் பொருட்கள் லாபம் தரும். பதவி உயர்வும் இடமாற்றமும் விருப்பம்போல் கிடைக்கும். 2-ல் செவ்வாயும், 3-ல் வக்கிர சனியும் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 26, 28. l திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.
கன்னி
கோசாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லை. 10-ல் உள்ள குரு 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பது நல்லது. வார முன் பகுதியில் சந்திரன் 6, 7-ஆம் இடங்களில் உலவுவதும் சிறப்பாகும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். பண வரவு சற்று அதிகமாகும். 24-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவதால் கலைத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
ஜன்ம ராசியில் செவ்வாயும் 2-ல் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. அவசரம் கூடாது. வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ஆமிடத்தில் உலவும் நிலை அமைவதால் மன சஞ்சலம் தரும் சம்பவம் நிகழும். புதிய துறைகளில் ஈடுபடலாகாது. செய்துவரும் காரியங்களிலும் அதிக கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 24, 25. l திசை: வடக்கு.
நிறம்: வெண்மை, பச்சை, பிரெளன், ரோஸ்.l எண்: 5.
பரிகாரம்: கணபதி, துர்கா, நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
16 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago