திருப்பாம்புரம் கோயிலில் ராகு - கேது பெயர்ச்சியில் சிறப்பு பூஜை; ஆன்லைனில் நேரலை தரிசனம்; வீட்டிலிருந்தே வணங்குங்கள்! 

By வி. ராம்ஜி

வருகிற செப்டம்பர் 1ம் தேதி ராகு - கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய நாளில், திருப்பாம்புரம் திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேக பூஜைகளை, ஆன்லைன் மூலம் நேரலையில் பக்தர்கள் தரிசிக்க, ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

திருப்பாம்புரம். நவக்கிரகங்களில் உள்ள ராகு - கேதுவுக்கான பரிகாரத் திருத்தலம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது பேரளம். இந்த ஊருக்கு அருகில் உள்ளது

ராகு-கேதுவுக்கு தனிச் சந்நிதி கொண்ட கோயில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்கிறது திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் திருக்கோயில்.

ராகு - கேது பகவான் பகல் 2.16 மணிக்கு மிதுன ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்தத் திருத்தலத்தில் வருகிற 01-09-2020 செவ்வாய்க் கிழமை

ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு - கேது பெயர்ச்சி சிறப்பு பூஜையானது காலை 12.30 மணி முதல் 2.30 மணி வரை நடைபெற உள்ளது. அப்போது நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


பக்தர்கள் https://www.youtube.com/channel/UCfKVk8uHtLXUr4cKGJaINHw?view_as=subscriber என்ற YouTube channel மூலம், 01.09.2020 காலை 12.30 மணிக்கு நேரலை ஒளிபரப்பு மூலம், விசேஷ பூஜையைத் தரிசித்து அருள்மிகு பாம்புரநாத சுவாமியின் அருளைப் பெறலாம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் நேரலையில் கண்டு இறைவனின் அருளைப் பெறுங்கள் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

6 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

5 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

மேலும்