துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் குருவும் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்க்ளில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலை உயரும். மதிப்பும் அந்தஸ்தும் கூடும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணை நலம் சீராகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். மருத்துவர்களுக்கு நற்பெயரும் புகழும் உண்டாகும். உடல்நலம் சீராகும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 12, 15, 16.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7, 9.
பரிகாரம்: துர்க்கை கவசம் படித்து பூஜை செய்யவும்.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் ராகுவும் உலவுவது விசேடமாகும். தொலைதூரத் தொடர்பு நலம் தரும். தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் ஆக்கம் தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். தந்தை சேமித்துவைத்த சொத்துகள் கிடைக்கும். செய்தொழில் லாபம் தரும். புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல் ஈடுபாடு பயன்படும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ சிலருக்கு கிடைக்கும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பயணம் ஆக்கம் தரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 12, 15, 16.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 2, 4, 5, 6.
பரிகாரம்:
சனிக்கும் செவ்வாய்க்கும் கேதுவுக்கும் பரிகாரங்களைச் செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் சூரியனுடன் கூடி இருப்பது மிகவும் விசேடமாகும். புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் விசேடமான நன்மைகள் உண்டாகும். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாக இருக்கும்.
சந்திரன் 8-ல் செவ்வாய், சுக்கிரனுடன் கூடுவதால் இயந்திரங்கள், வாகனங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். திருப்பணிகளில் கலந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, புகை நிறம். வெண்மை, இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: செவ்வாய்க்கும் கேதுவுக்கும் சனிக்கும் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் சனியும் உலவுவது நல்லது., புதன் 9-ல் இருந்தாலும் தன் சொந்த, உச்ச, மூலத்திரிகோண ராசியில் உலவுவதால் நலம் புரிவார். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். விவசாயம் லாபம் தரும். பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள், கச்சாப் பொருட்கள் மூலம் வருவாய் கூடும். பொதுநலப் பணியாளர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பொருளாதார நிலை ஓரளவு உயரும். 7 -ல் செவ்வாயும் சுக்கிரனும் இருப்பதால் வாழ்க்கை துணை நலனில் கவனம் தேவை. மக்கள் நலனிலும் தந்தை நலனிலும் அக்கறை தேவை. பிறரிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 15, 16.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.
எண்கள்: 5, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், குரு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாயும் 7-ல் குருவும் 8-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கனிந்துவரும். பொருளாதார நிலை உயரும்.
உத்தியோகஸ்தர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய யுக்தி முறைகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். சுக்கிரன் 6-ல் இருப்பதால் பெண்களுக்குச் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 12, 16 (பிற்பகல்).
திசைகள்: வடக்கு, தெற்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம், செந்நிறம்.
எண்கள்: 3, 5, 8, 9.
பரிகாரம்:
சுமங்கலிப் பிராத்தனை செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே!
சூரியனும் சுக்கிரனும் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் உங்கள் தோற்றப்பொலிவு கூடும். மன மகிழ்ச்சி கூடும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களாலும் மனைவியாலும் அளவோடு அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அரசியல்வாதிகள் தங்கள் கொள்கைகளை வெளியிட்டு வரவேற்பைப் பெறுவர். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். ராசிநாதன் குரு 6-ல் இருப்பதால் உடல்நலம் ஒருநாள் போல் மறுநாள் இராது. எதிரிகள் இருப்பார்கள் என்றாலும் சமாளிப்பீர்கள். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 12, 15.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இளநீலம் .
எண்கள்: 1, 6.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்வது நல்லது. வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
13 hours ago
ஆன்மிகம்
15 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago