உங்கள் கடனையெல்லாம் தீர்த்துவைக்கும் மகாலக்ஷ்மி வழிபாடு! 

By வி. ராம்ஜி

தெரிந்தோ தெரியாமலோ நாம் ஏதேனும் தவறுகளைச் செய்துவிடுகிறோம். மனித வாழ்க்கைக்கே உண்டான தான - தரும நியமங்களைச் செய்யாமல் இருந்துவிடுகிறோம். முன்னோர் வழிபாட்டையும் குலதெய்வ பூஜையையும் குறைவறச் செய்யாமல் இருந்துவிடுகிறோம். இப்படியான விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து நம் வாழ்வின் வளங்களுக்கும் நிம்மதிக்கும் தடையாக இருக்கின்றன. இந்தத் தடைகளில் இருந்து நாம் வருவதற்குத்தான் பூஜைகளும் வழிபாடுகளும் ஆச்சார்யர்களால் சொல்லப்பட்டிருக்கின்றன.

கிழமைக்கும் நமக்கும் தொடர்பு உண்டு. திதிக்கும் நமக்கும் தொடர்பு உண்டு. காலத்துக்கும் நமக்கும் தொடர்பு உண்டு. ஆக, ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பொழுதும் நம்முடன் தொடர்பில் இருக்கின்றன. நாம்தான் அவற்றையெல்லாம் உணர்ந்து கொண்டும் புரிந்துகொண்டும் அந்த நாளின் மகத்துவங்களை அறிந்துகொண்டும் உரிய முறையில் அதற்கான விஷயங்களை எடுத்துச் செய்யவேண்டும்.

நாம் பிறந்த நாளினைக் கொண்டாடுகிறோம். பிறந்த நட்சத்திர நாளினைக் குதூகலமாகக் கழிக்கிறோம். திருமண நாள், குழந்தைகளின் பிறந்தநாள்... வேலைக்குச் சேர்ந்த நாள், வீடு வாங்கிய நாள் என்றெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். சந்தோஷப்படுத்துகிறோம். அப்படியான சந்தோஷத்தையும் பூரணமான நிம்மதியையும் நிறைவையும் நமக்குக் கொடுப்பதற்குத்தான், வழங்குவதற்குத்தான் பண்டிகைகள், பூஜைகள், வழிபாடுகள் உண்டுபண்ணப்பட்டிருக்கின்றன.
வருடத்தில், எத்தனையோ வழிபாடுகள் இருக்கின்றன. பூஜைகள் இருக்கின்றன. விரதங்கள் இருக்கின்றன. நமக்கும் எத்தனையெத்தனையோ பிரார்த்தனைகள் உண்டு. அப்படியான பூஜைகளில், ஒரு குடும்பத்துக்கும் வம்சத்துக்கும் மிக முக்கியமானதுதான் சக்தி வழிபாடு.

சக்தி வழிபாடு எப்போதும் செய்யலாம். எல்லா சக்தியையும் வணங்கலாம். எல்லா பெண் தெய்வங்களிடமும் முறையிடலாம். அவற்றில் தலையாயது... மிக மிக விசேஷமானது... மகாலக்ஷ்மி பூஜை.

காசும் பணமும் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் பலருண்டு என்றாலும் பொருளாதாரத்துக்காகத்தானே அல்லாடுகிறோம். போராடுகிறோம். பெரியவர்களைப் பார்த்துக்கொள்ள மருந்து மாத்திரை வாங்கவும் அவர்கள் நோயின்றி வாழவும் விரும்புகிறோம். அடுத்த தலைமுறையான குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எதற்கும் எந்தத் தருணத்திலும் கையில் நாலு காசு இருக்கணும், சிறிய அளவிலாவது வீடு இருக்கணும் என்று சின்னச் சின்ன எதிர்பார்ப்புகள் நிறைந்ததுதானே வாழ்க்கை.

இவற்றையெல்லாம் குறைவற நமக்குத் தருபவள்தான் மகாலக்ஷ்மி. அவளைக் கொண்டாடுவதுதான் வரலக்ஷ்மி விரதம். இன்று 31ம் தேதி வரலக்ஷ்மி பூஜை நன்னாள்.

வரலக்ஷ்மி... வரம் தரும் லக்ஷ்மி. வீட்டுக்கே வந்து அருளும் லக்ஷ்மி. வரலட்சுமி பூஜையைச் செய்து பழக்கமில்லாதவர்கள் கூட, வீட்டில் உள்ள லக்ஷ்மியின் படத்துக்கு மாலையிட்டு, உங்களுக்கு என்னவெல்லாம் பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யமுடியுமோ செய்து, உங்களுக்கு என்ன ஸ்லோகமெல்லாம் தெரியுமோ அவற்றைச் சொல்லி வழிபடுங்கள்.
பசுவிலும் இருக்கிறாள் மகாலக்ஷ்மி. எனவே இன்றைய தினத்தில் பசுவுக்கு உணவிடுங்கள். சுமங்கலிகளுக்கு ஜாக்கெட் பிட் மட்டுமாவது வழங்குங்கள். மஞ்சள், குங்குமம் கொடுங்கள். நீங்கள் தீர்க்கசுமங்கலியாக வாழ்வீர்கள்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ சிறியவர்களுக்கோ இதுவரை இருந்த நோயெல்லாம் தீரும்.

உங்களுக்கு... இதுவரை மனதை இறுக்கிக் கொண்டிருந்த கடன் தொல்லைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். வீட்டில் இருந்த நகைகளும் ஆபரணங்களும் அடகில் இருந்த நிலையெல்லாம் மாறிவிடும். சேமிப்பு வளரும். வாழ்வாதாரம் உயரும். வாழ்வாங்கு வளமுடனும் நலமுடன் வாழச் செய்யும் வரலக்ஷ்மியை, மகாலக்ஷ்மியை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.


ஓம் வரலக்ஷ்மியே வருக... ஓம் வரலக்ஷ்மியே போற்றி... ஓம் வரலக்ஷ்மியே சரணம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

16 hours ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

1 day ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

2 days ago

ஆன்மிகம்

3 days ago

ஆன்மிகம்

4 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

6 days ago

ஆன்மிகம்

7 days ago

ஆன்மிகம்

8 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

9 days ago

ஆன்மிகம்

10 days ago

மேலும்