சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் ’ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வருகின்ற 24.07.2020 வெள்ளிக் கிழமை நாளைய தினம் ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’ எனும் வைபவமாக, திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் என்பதே அம்பிகைக்கு உரிய மாதம்தான். ஆடிப்பூரம் என்பது தேவிக்குரிய திருநாள். இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்தாள் என்கிறது புராணம். அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான தனிச் சிறப்பு. பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப் பூரம். அம்பாளுக்கு வளைகாப்பு நடத்துகிற வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், கல்யாண வரம் அமையும். சந்தான பாக்கியம் நிகழும் என்பது ஐதீகம்.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 24.07.2020 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு வளைகாப்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பக்தர்கள் தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மன் அருளைப் பெறுங்கள்.
மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும். இந்தத் தகவலை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் வளைகாப்பு உற்ஸவத்தினை நேரலையில் கண்டு இறை சக்தியின் பேரருளைப் பெறுங்கள் என திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆடிப்பூர நன்னாளில், அம்பிகையின் வளைகாப்பு வைபவத்தை வீட்டிலிருந்தபடியே தரிசிப்போம். எல்லா நலமும் வளமும் பெற்று இனிதே வாழ்வோம்!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
14 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago