ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தம் மகத்துவம் மிக்கது. ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தத்தை தினமும் சொல்லி வந்தால், சகலவிதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். பகைகள் அனைத்தும் விலகும். தலைமுறை கடந்த பகை அனைத்தும் விலகும்.
மேலும் மாந்திரிக, தாந்திரீக விஷயங்களும் பில்லி, சூனியங்களும் நீக்கி அருளக்கூடியது.
கந்தசஷ்டி கவசத்தை தினமும் சொல்லி வந்தால், முருக பக்தர்களை பில்லி சூனியம் முதலான எந்த ஏவலும் ஒன்றும் செய்யாது. அண்டாது. தீண்டவே முடியாதபடி, தீயசக்திகள் தெறித்து ஓடும்.
அதேபோல, ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி என பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்.
» கந்தசஷ்டி கவசம், திருப்புகழ் பாடுங்கள்; வேதனைகள் தீர்ப்பான் விராலிமலை முருகன்
» தலையெழுத்தை திருத்தி அருளும் திருப்பட்டூர் பிரம்மா; பிரம்ம முகூர்த்தத்தில் பிரம்ம மந்திரம்
“வரதந திபநக ரகமுக வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு
முனிவருதி “
- இதுவே மயூரபந்தம்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் எழுதிய மயூர பந்தமானது, சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் தினமும் காலையில் பாராயணம் செய்துவந்தால் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும். சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.
இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், புலால் உண்பதை அறவே தவிர்க்கவேண்டும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும் என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. எடுத்த காரியம் யாவிலும் துணை நிற்பான் முருகக் கடவுள்.
முருகனுக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த மந்திரத்தை அன்று தொடங்கி, பாராயணம் செய்து வருவது மிகவும் நல்லது. அப்போது வீட்டில் உள்ள முருகப்பெருமானின் படத்துக்கு, செவ்வரளிப்பூ போடுங்கள். மனமுருகி கந்த சஷ்டி கவசத்தையும் மயூர பந்தத்தையும் பாராயணம் செய்யுங்கள். பகைகள் அனைத்தும் செயலிழந்து ஓடும்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
8 hours ago
ஆன்மிகம்
1 day ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
9 days ago