சனிப் பிரதோஷத்தை வீட்டிலிருந்தே நேரலையில் தரிசிக்க, பல ஆலயங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. நாளைய தினம் 18ம் தேதி ஆடி மாதத்தின் முதல் பிரதோஷம். சனிப் பிரதோஷம். சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் பிரதோஷ பூஜையை வீட்டில் இருந்தபடியே, கண்ணாரத் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் சனிப் பிரதோஷ பூஜையைக் கண்ணாரத் தரிசியுங்கள்.
சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வருகின்ற 18.07.2020 சனிக்கிழமையான நாளைய தினம் பிரதோஷ நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.
பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனிப் பிரதோஷம். திரயோதசி திதியன்று வருவதே பிரதோஷம். திரயோதசி திதியும் சனிக்கிழமையும் சேர்ந்து வருவது சனிப் பிரதோஷம் என்று போற்றப்படுகிறது.
» ஆடி பிரதோஷம், சனி பிரதோஷம்; பாவம் போக்கும் பிரதோஷம்
» ஆடி ஏகாதசி, துவாதசியில் வேங்கடாசலபதி வழிபாடு; வேதனைகள் தீரும்; சோதனைகள் அகலும்! - ஆடி ஸ்பெஷல்
சிவபெருமான் தேவர்களைக் காப்பாற்ற ஆலகால நஞ்சினை உண்ட நாள் சனிக்கிழமை. அதனாலேயே சனிப் பிரதோஷம் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.
பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், சனிப் பிரதோஷ பூஜையை, 18.07.2020 சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு தரிசிக்கலாம். நந்தியம் பெருமான் அபிஷேகத்தையும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகத்தையும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசித்து அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை தியாகராஜ சுவாமியின் பேரருளைப் பெறலாம்.
மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும்.
இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை நேரலையில் கண்டு இறைவன் அருளைப் பெறுங்கள் என்று திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சனிப்பிரதோஷம் சர்வ பாபவிமோசனம் என்பது ஐதீகச் சொல். சிவனருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். சிவ தரிசனத்தை எல்லோரும் காணட்டும்.
நமசிவாயம் வாழ்க... நாதன் தாள் வாழ்க!
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
23 mins ago
ஆன்மிகம்
22 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago