ஆடி மாதப் பிறப்பு இன்று. இந்தநாளில், சர்வ ஏகாதசியும் இணைந்துள்ளது. எனவே, அற்புதமான ஆடிப் பிறப்பு நாளில், வீட்டிலிருந்தபடியே நம் வம்சத்தைக் காக்கும் ஏழுமலையானை வேண்டுவோம்.
அற்புதங்களும் மகத்துவமும் கொண்ட மாதம் ஆடி மாதம். வழிபாட்டுக்கும் வேண்டுதலுக்கும் உரிய மாதம். யோகங்களையும் கலைகளையும் கற்பதற்கு உகந்த மாதம் இது. அம்மனுக்கு உகந்த மாதம் என்பதுதான் அத்தனைக்கும் மகத்துவம் மிக்கதாகத் திகழ்கிறது.
ஆடி மாதம் வந்துவிட்டாலே, அம்மன் வழிபாடுகளில் மக்கள் லயிக்கத் தொடங்கிவிடுவார்கள். குடும்பமாகக் கூடி வழிபட வேண்டிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
இன்று ஆடி மாதம் பிறந்திருக்கிறது. குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமை. ஞானத்துக்குப் பெயர் பெற்ற வியாழக்கிழமையில், ஆடி மாதம் பிறந்திருப்பதால், இந்தநாளில் வீட்டில் காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். அம்பாளை, குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்.
» ஆடிக்கிருத்திகை நாளில்... கந்தசஷ்டி கவசம்; நம்மைக் காப்பான், தடைகளை தகர்ப்பான் வெற்றிவேலன்
» குரு வார வியாழக்கிழமையில் ஆடி மாதப் பிறப்பு; தர்ப்பணம், முன்னோர் வழிபாடு மறக்காதீங்க!
மேலும் இன்று கிருத்திகை. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாள். முருக வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். அம்பாள், குலதெய்வம் முதலான தெய்வங்களுடன் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டிய அற்புதமான நாள்.
இன்று ஏகாதசி. சர்வ ஏகாதசி. பெருமாளை ஏகாதசி நாளில் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இன்றைய அற்புதமான நாளில், திருப்பதி ஏழுமலையானை மனதார வேண்டுங்கள். காலையும் மாலையும் விளக்கேற்றுங்கள். எல்லா தெய்வங்களுக்கும் உகந்த நாளாக இந்த நாள் அமைந்திருப்பதால், சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் நைவேத்தியம் செய்து பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.
சகல தெய்வங்களின் பேரருளும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும். தெய்வ கடாட்சம் திகழும். சகல யோகங்களும் ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். உங்கள் வம்சம் தழைத்தோங்கும்.
ஆடி மாதப் பிறப்பு, குரு வார வியாழன், சர்வ ஏகாதசி, கிருத்திகை என நல்ல அதிர்வுகள் கொண்ட இந்தநாளில், எல்லா வளமும் நலமும் கிடைக்க, பிரார்த்தனை செய்யுங்கள்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
21 hours ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
2 days ago
ஆன்மிகம்
3 days ago
ஆன்மிகம்
4 days ago
ஆன்மிகம்
5 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
6 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
7 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
8 days ago
ஆன்மிகம்
9 days ago